கோதுமை – எள் ஸ்நாக்ஸ்

Loading...

கோதுமை - எள் ஸ்நாக்ஸ்
தேவையானவை:
கோதுமை மாவு, மைதா மாவு – தலா ஒரு கப், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், ஆச்சி இட்லி மிளகாய் பொடி – தேவையான அளவு, எள் – 2 டீஸ்பூன், கொப்பரைத் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி (பொடித்தது) – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கோதுமை மாவு, மைதா மாவு, சிறிதளவு உப்பு ஆகியவற்றைக் கலந்து, தேவையான நீர் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும். அரிசி மாவு, நெய்யைக் குழைத்துத் தனியே வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக இடவும். ஒவ்வொரு சப்பாத்தியின் மேல் பாகத்தில் குழைத்த மாவைத் தடவவும். அதன் மேல் ஆச்சி இட்லி மிளகாய் பொடி தூவவும். ஒன்றின்மேல் ஒன்றாக சப்பாத்தியை அடுக்கி ரோல் செய்யவும். ரோலை துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடு செய்து, வெட்டிய துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரிக்கவும். பொரித்தவற்றைத் தட்டில் வைத்து, எள், கொப்பரைத் துருவல், முந்திரிப்பொடி தூவி சூடாகப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply