கோடையில் தாக்கும் தட்டம்மை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

Loading...

கோடையில் தாக்கும் தட்டம்மை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்கோடையில் பலரையும் தாக்கும் தட்டம்மை அல்லது சின்னமுத்து, மணல்வாரி அம்மை என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய ஓர் கொடிய கோடைக்கால நோய்.
இது பாராமைக்ரோ வைரஸ் வகையில் ஒன்றான மோர்பில்லியால் ஏற்படும் ஓர் சுவாச நோய்த்தொற்றாகும். இது குழந்தைகளை அதிகம் தாக்கும். மேலும் இந்த தட்டம்மையை சாதாரணமாக விட்டால், உயிரையே இழக்க நேரிடும்.
இங்கு தட்டம்மை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து, உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தட்டம்மை அறிகுறிகள்

தட்டம்மைக்கான முதல் அறிகுறி 104 டிகிரி F-க்கும் அதிகமான அளவில் காய்ச்சல் வருவது. பின் கண்களில் இருந்து நீர் வடிதல், பசியின்மை, வாயினுள் அரிப்புக்கள் மற்றும் சருமத்தின் மேல் சிவப்பு நிற புள்ளிகள் இருப்பது போன்றவை.

தட்டம்மைக்கான காரணங்கள்

தட்டம்மை வருவதற்கு காரணம் வைட்டமின் ஏ குறைபாடு, சுகாதாரமற்ற வாழ்க்கை முறை, நோயெதிர்ப்பு சக்தி மோசமான அளவில் இருப்பது மற்றும் தட்டம்மை உள்ளோருடன் அருகில் அமர்ந்து பேசுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

தட்டம்மைக்கான தடுப்பூசி உள்ளதா?

கோடையில் உயிரைப் பறிக்கும் அளவிலான தட்டம்மை நோய்க்கு 1963 ஆம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியின் பெயர் MMRV.
எவ்வளவு காலம் தடுப்பூசி வேலை செய்யும்?
MMR தடுப்பூசியை ஒருவர் இரண்டு முறை போட்டுக் கொண்டால், அவருக்கு 20 வருடங்கள் தட்டம்மை நோய் வராமல் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தட்டம்மையால் இறப்பு ஏற்படுமா?

தட்டம்மையால் பாதிக்கப்பட்டவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், நோயாளி இந்நோயால் தீவிரமடையக்கூடும். ஒருவேளை தட்டம்மையின் அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிட்டால், அதனால் மூளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக இறப்பை சந்திக்க வேண்டியிருக்கும். நிறைய குழந்தைகள் தட்டம்மையால் இறந்ததற்கு காரணமும் இதுவே ஆகும்.

தட்டம்மை தடுப்பூசி வேலை செய்ய எவ்வளவு காலம் ஆகும்?

ஒருவர் தட்டம்மை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால், அது வேலை செய்ய 2 வாரங்கள் ஆகும் என உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர்.

தட்டம்மை உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவைகள்

தட்டம்மையால் பாதிக்கப்பட்டால், முதல் மூன்று நாட்கள் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். பின் மெதுவாக பார்ஸ்லி, பச்சை இலைக் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி திரவங்களான இளநீர், பழச்சாறு, எலுமிச்சை ஜூஸ் மற்றும் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.

கை வைத்தியத்தின் மூலம் தட்டம்மையை குணப்படுத்த முடியுமா?

கோடையில் ஏற்படும் நோய்களை வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரால் குளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம். அதிலும் வெதுவெதுப்பான நிலையில் குளித்தால், சருமத்திற்கு சற்று இதமாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply