கோடையில் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் பாதாம்

Loading...

கோடையில் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் பாதாம்கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்ட நிலையில், தற்போது வெயிலின் தாக்கத்தை தாங்க முடியவில்லை. இக்காலத்தில் தான் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு வெள்ளையாக்கிய நமது சருமத்தின் நிறம் மீண்டும் கருமையாகும் என்பது தான் கொடுமையான விஷயம்.
சரி, கோடையில் சருமத்தின் நிறம் மாறாமல், சருமத்தில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் பாதாம் இருந்தால், அதனை சாப்பிடுவதுடன், அவ்வப்போது அதனைக் கொண்டு சருமத்தையும் பராமரித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
இப்போது பாதாமைக் கொண்டு எப்படியெல்லாம் சருமத்தைப் பாதுகாக்கலாம் என்றும், எந்த பிரச்சனைகளுக்கு எம்மாதிரியான பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் பார்ப்போம்.

அழுக்குகளை முற்றிலும் நீக்க…

சருமத்தில் உள்ள அழுக்குகளை தவறாமல் தினமும் சரியாக நீக்கினாலே, முகம் புத்துணர்ச்சியுடன், இளமையாக காட்சியளிக்கும். அதிலும் 8 பாதாமை நீரில் நன்கு ஊற வைத்து, பின் அதை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் முற்றிலும் வெளியேறிவிடும்.

சரும கருமையைப் போக்க…

இந்த ஃபேஸ் மாஸ்க் அனைத்து வகையான சருமத்தினருக்கும் பொருந்தும். அதற்கு பாதாம் பொடியில், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்மு, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கலாம்.

கருவளையங்களை நீக்க…

கோடை வெயிலின் வெப்பத்தினால் பலரும் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல், அதனால் பலருக்கும் கருவளையங்கள் வர ஆரம்பிக்கும். அப்படி கருவளையங்கள் இருந்தால், அதனை நீக்க, பாதாம் எண்ணெயைக் கொண்டு கண்களைச் சுற்றி மென்மையாக தினமும் இரவில் படுக்கும் முன் மசாஜ் செய்ய வேண்டும்.

சரும வறட்சியை

சிலருக்கு கோடையிலும் சருமம் வறட்சியடையும். அத்தகையவர்கள், 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயில் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து ஸ்கரப் செய்ய வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சரும வறட்சி நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களும் வெளியேற்றப்படும்.

பாதாம் ஹேர் பேக்

பாதாம் கூந்தலுக்கும் மிகவும் நல்லது. சொல்லப்போனால் பாதாம் சிறந்த கண்டிஷனராக செயல்படும். அதிலும் ஒரு கப் பாதாம் பொடியுடன், 1 முட்டை, 1/2 கப் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் வெந்தய பேஸ்ட் சேர்த்து கலந்து, அதனை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அலச வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply