கோகோ கோலா மற்றும் பெப்சியில் ஆல்கஹால் அதிர்ச்சி தகவல் | Tamil Serial Today Org

கோகோ கோலா மற்றும் பெப்சியில் ஆல்கஹால் அதிர்ச்சி தகவல்

Loading...

கோகோ கோலா மற்றும் பெப்சியில் ஆல்கஹால்  அதிர்ச்சி தகவல்கோகோ கோலா மற்றும் பெப்சியில் ஆல்கஹால் கலந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஆல்கஹால் கலந்திருப்பது தொடர்பாக பிரான்ஸைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது.

இதற்காக 19 விதம் விதமான கோக் பாட்டில்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் பத்து பாட்டில்களில் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இருப்பினும் ஒவ்வொரு ஒரு லிட்டர் பாட்டிலிலும் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருப்பதாக தெரிய வந்தது. இதேபோல பெப்சியிலும் ஆல்கஹால் இருக்கிறதாம்.

இதுகுறித்து கோகோ கோலாவின் பிரான்ஸ் பிரிவு அறிவியல் இயக்குநர் மைக்கேல் பெபின் கூறுகையில், கோக்கில் ஆல்கஹால் கலந்திருக்கிறது என்பதில் ஓரளவு உண்மைதான். இருப்பினும் இது மிக மிக மென்மையான அளவில்தான் இருக்கும்.

ஆனால் இதை வைத்து கோக்கை மது பானம் என்று கூறி விட முடியாது. இது மென் குளிர்பானம் தான். இந்த குளிர்பானத்தை அருந்தலாம் என்று பாரீஸைச் சேர்ந்த இஸ்லாமிய மசூதி ஒன்று சான்றிதழ் அளித்துள்ளது.

பெப்சி நிறுவனமும் இதேபோல இத்தகைய குளிர்பானங்களில் மிக மிக சிறிய அளவில் ஆல்கஹால் கலந்திருக்கும் என்பதை ஒத்துக் கொண்டுள்ளது.

கோக் 1886ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. ஆரம்பத்தில் இதை தலைவலி, ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
VTST BN