கொள்ளையைத் தடுக்க உதவிய ‘வெப்கேமரா’

Loading...

கொள்ளையைத் தடுக்க உதவிய ‘வெப்கேமரா’துருக்கி நாட்டைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர் தங்கள் குடும்ப துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுமார் 1,500 மைல் தொலைவில் இருக்கும் இங்கிலாந்து நாட்டில் உள்ள எச்செஸ் நகருக்குச் சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவியும், மகனும் இருந்தார்கள். இதனால் கம்பியூட்டர் வெப்கேமரா மூலம் தொடர்பு கொண்டு மனைவியுடன் பேசி வந்தார். இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது மகனைப் பார்ப்பதற்காக மனைவி திடீரென்று எழுந்து வீட்டிற்கு வெளியே சென்றுவிட்டார். என்றாலும் கணவரோ தொடர்பைத் துண்டிக்காமல் இருந்தார்.

அப்போது இவர்களது வீட்டிற்குள் இருக்கும் வரவெற்பு அறையில் 2கொள்ளையர்கள் நுழைவதை கேமரா மூலம் பார்த்துவிட்டார். உடனே சுதாரித்துக்கொண்ட அவர், வீட்டை விட்டு வெளியே செல்லுஙகள். இல்லாவிட்டால் நான் போலீசை அழைப்பேன் என்று கூறி மிரட்டினர். இந்த சத்தத்தைக் கேட்டு அதிர்ந்து போன கொள்ளையர்கள் 2 பேரும் தப்பினால் போதும் என்று கொள்ளையில் ஈடுபடாமல் வெறும் கையுடன் தப்பி ஓடிவிட்டனர். இருப்பினும் வெப்கேமராவில் பதிவான கொள்ளையரின் அடையாளத்தை வைத்து போலீசில் புகார் கொடுத்தார். இந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கொள்ளையை முறியடித்த அவருடைய அதிரடி நடவடிக்கையையும் போலிசார் பாராட்டினர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply