கொத்தமல்லி – புதினா மசாலா பொரி

Loading...

கொத்தமல்லி -  புதினா மசாலா பொரி
தேவையானவை:
பொரி – ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி – அரை கப், நறுக்கிய புதினா – கால் கப், கறிவேப்பிலை – சிறிதளவு (நறுக்கவும்), பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), சிறிய சதுரமாக நறுக்கிய மாங்காய் – 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சை பழம் – அரை மூடி, உப்பு – சிறிதளவு.


செய்முறை:
நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலையைபொரியில் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், மாங்காய் சேர்த்து… உப்பு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் தூவிக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.
விருப்பப்பட்டால்… ஓமப்பொடி (கார வகை), தட்டை, பொரித்த கார்ன் ஃப்ளேக்ஸை ரெடிமேடாக வாங்கி கலந்தும் சாப்பிடத் தரலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply