கூந்தல் பராமரிப்புக்கு செம்பருத்தி தைலம்

Loading...

கூந்தல் பராமரிப்புக்கு செம்பருத்தி தைலம்அடர்த்தியான கருகரு கூந்தலுடன் உலாவர ஆசைதான். ஆனால், `முடி செம்பட்டையாக இருக்கிறதே…’ என்று கவலைப்படுகிறவர்களுக்கான பயனுள்ள தகவல் இது…

உலர்ந்த நெல்லிக்காய் பவுடர் – 1 டீஸ்பூன், மருதாணி பவுடர் – 1 டீஸ்பூன் வெந்தய பவுடர் – 1 டீஸ்பூன்…. இவற்றை 2 டீஸ்பூன் தேங்காய்ப் பாலில் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் பேக் ஆக போட்டு ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள்.

இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை செய்தாலே போதும். உங்கள் கருகரு கூந்தலைக் காண்பவர் உள்ளம் அலைபாயும். பேன்களும் பொடுகும் உங்கள் தலையின் நிரந்தரக் குடிமக்களாகி விட்டனவா? அவற்றை விரட்டியடிக்க, இதோ…. ஒரு தேங்காய் வைத்தியம்.

மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை…. இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள். பிறகு, அரை கப் தேங்காய் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள்.

பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகிவிடும். இதைக் தலையில் தடவி, மசாஜ் குளியுங்கள் (சீயக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை. வாரம் இருமுறை இந்த சிகிச்சையை செய்து வாருங்களேன். பேனும் பொடுகும் பக்கத்திலேயே நெருங்காது!

• செக்கச் செவேர் செம்பருத்தி பார்க்க மட்டுமல்ல்… பலனிலும் சூப்பர் தான். கூந்தல் பராமரிப்புக்கு இதைக் காட்டிலும் சிறந்தது வேறில்லை. மிஸ் கூந்தல் என்ற பட்டத்தை தேடி வரச் செய்யும் அளவுக்கு கருகரு கூந்தல் நீளமாக வளர கலக்கல் தைலம் இது…

செம்பருத்திப்பூவை இடித்து சாறு பிழித்துகொள்ளுங்கள். இந்த சாறுக்குச் சமமாக தேங்காய் எண்ணெய் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்துக் காய்ச்சுங்கள். தேங்காய் எண்ணெய்யின் கொதி வாசனை வருவதற்கு முன்பே இறக்கி விடுங்கள்.

இந்த தைலத்தை தினமும் தேய்த்து வர, முடி வளர்ச்சி தூண்டப்படும் கருகருவென முடி வளரும். தலையில் உள்ள பிசுக்கைப் போக்கவும் இந்தத் தைலம் பயன்படும். இந்த தைலத்தில் சில துளிகள். வைட்டமின் ஈ ஆயில் சில துளிகள்…. இரண்டையும் தனித்தனியே தலையில் தேய்த்து மசாஜ் செய்து, தலையை வாருங்கள்.

ஒரு துணியால் ஆவி ஒத்தடம் கொடுத்து, பிறகு வெறும் தண்ணீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இப்படி செய்து பாருங்கள்… தலையில் உள்ள பிசுக்கு போய் பளபளவெ மின்னும். தலையில் பொடுகும் நரையும் ஏற்பட்டால் கூந்தல் பொலிவில்லாமல் போய்விடும்.


அப்படி நேராமல் கூந்தலைப் பாதுகாக்கிறது இந்த செம்பருத்தி பேக்

செம்பருத்தி இலை – 10, மருதாணி இலை – 20 முழு சீயக்காய் 2… மூன்றையும் நன்றாக அரைத்து, தலையில் தேய்த்து பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இப்படி குளியுங்கள். இதிலுள்ள செம்பருத்தி பொடுகை போக்கி கூந்தலை பளபளப்பாக்கும். மருதாணி இளநரையை போக்கும். சீயக்காய் முடியை சுத்தப்படுத்தும்.


பட்டு போன்ற மென்மையோடு கூந்தல் பளபளக்க உடனடி டிப்ஸ் இதோ…

10 செம்பருத்தி இலைகளை தண்ணீரில் கொதிக்கவிடுங்கள். இலை தண்ணீரில் குழைந்துவிடும். பிறகு இலையை எடுத்து விட்டு, இந்தத் தண்ணீரில் சீக்காயைக் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

கறுப்பு சாட்டின் துணியைப் போல முடி டாலடிப்பதைக் கண்டு மகிழ்வீர்கள். அடர்த்தியான கூந்தல் என்றாலே, சீக்கிரத்தில் அழுக்குப் படிந்துவிடும். தலையை சுத்தமாக்க செம்பருத்தி தருகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply