கூந்தல் பராமரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

Loading...

கூந்தல் பராமரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

செய்ய வேண்டியவை :

1. தலைமுடியை தினமும் நன்கு சீவ வேண்டும்.

2. வாரம் 2 அல்லது 3 முறை சுத்தம் செய்ய வேண்டும்.

3. மிதமான சுடு தண்ணீர் கொண்டு தலை முடியை சுத்தம் செய்ய வேண்டும்.

4. தேங்காய் எண்ணெய்யை விட நல்லெண்ணை தேய்த்து குளிப்பது நல்லது.

5. மெல்லிய வெள்ளை துணியில் தலையை துடைக்க வேண்டும்.

6. அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

7. உடலை மிகவும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

8. பால் மற்றும் பால் பொருட்களை உணவில் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

9. சுத்தமான சீப்பு உபயோகிக்க வேண்டும்.

10. செம்பருத்தி இலையின் சாறு கொண்டு தலையை அலசவும்.

11. பசுமையான காய் கீரைகள்.

12. இளநீர், மோர் குடிக்க வேண்டும்.

13. தேங்காய் பால் குடிப்பது மற்றும் தலையில் தேய்ப்பது கருகருவென்ற முடியை கொடுக்கும்.செய்யக்கூடாதவை:

1. நகங்களால் தலையை சொரியக் கூடாது.

2. மிகவும் சூடான நீரில் தலையை அலசக் கூடாது.

3. பிறர் உபயோகித்த சீப்பு, டவல் போன்ற வற்றை உபயோகப்படுத்தக் கூடாது.

4. மின்சார உலர வைக்கும் கருவியால் தலையை உலர்த்தக் கூடாது.

5. தலை வறண்டு போகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

6. உணவில் காரம், புளிப்பு மற்றும் மசாலா பொருட்களை அதிக அளவில் சேர்க்க கூடாது.

7. ரசாயணம் கலந்த சாயக்கலவைகளை தலைக்கு உபயோகிக்க கூடாது.

8. வெயிலில் சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும். 9. அடிக்கடி டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

10. தலைக்கு தினமும் ஷாம்பு போடக் கூடாது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply