கூந்தல் உதிர்வை தடுக்கும் சிகிச்சை

Loading...

கூந்தல் உதிர்வை தடுக்கும் சிகிச்சைவேப்பந்தளிர் – 10
எலுமிச்சைச் சாறு – ஒரு ஸ்பூன்
துளி இலை – ஒரு பிடி


செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரைக் கொதிக்கவிடவும். அதில், மேலே உள்ள மூன்றையும் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்துத் தண்ணீரை வடிகட்டவும். நல்ல அடர்ந்து துணி ஒன்றைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, நன்றாக ஆயில் மசாஜ் செய்த தலையில் ஒத்தடம் போல் வைத்து எடுக்கவும்.

இவ்வாறு 15 நிமிடம் செய்ய வேண்டும். இது, முடி உதிர்வதைத் தடுப்பதோடு நல்ல வளர்ச்சியையும் தூண்டும். இதே போல் வாரம் ஒரு முறை தொடர்ந்து 3 மாதங்களுக்கு செய்தால், முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தி நல்ல கரு கருவென்ற கூந்தல் வளரக்கூடும்!

`ஸ்டெரெயிட்டனிங்’ (முடியை நேராக்குதல்) செய்வதால் முடியானது ஆறே மாதத்தில் சுருங்கி, வலுவிழுந்து விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதைத் தடுக்க, கொதிக்கும் டீ டிகாக்ஷனில் டர்க்கி டவலை நனைத்துப் பிழிந்து, தலை முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம்.

ஏ.சியிலேயே இருப்பவர்களுக்கு கூந்தல் வறட்சி, நுனி முடி பிளவு போன்றவை ஏற்படும். ஓமம், சீரகம், உடைத்த கடுக்காய் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து விழுதாக அரைத்து அதனுடன் கடலை மாவு, பயத்த மாவு கலந்து தலைக்கு தேய்த்து அலசும் போது, இந்தப் பிரச்சினைகள் தீரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply