‘குள்ள கிரகம்’ எனப்படும் ப்ளூட்டோவின் 5வது நிலா கண்டுபிடிப்பு

Loading...

‘குள்ள கிரகம்’ எனப்படும் ப்ளூட்டோவின் 5வது நிலா கண்டுபிடிப்பு!‘குள்ள கிரகமாக’ அறியப்படும் ப்ளூட்டோவின் 5வது நிலாவையும் நாசா வி்ஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி இந்த புதிய நிலாவைக் கண்டுபிடித்துள்ளது. சூரியக் குடும்பத்தில் 10வது கிரகமாக சில காலத்திற்கு முன்பு வரை திகழ்ந்து வந்த ப்ளூட்டோ பின்னர் அதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு விட்டது. தற்போது அதை குள்ள கிரகம் அதாவது ட்வார்ப் பிளானட் என்று அழைக்கின்றனர்.

ப்ளூட்டோவைச் சுற்றிலும் நான்கு நிலாக்கள் இருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 5வது நிலாவை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எஸ் 2012 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய நிலா, ப்ளூட்டோவிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது. ஒழுங்கற்ற வடிவில் காணப்படுகிறது. ப்ளூட்டோவின் 5 நிலாக்களையும் சேர்த்துப் பார்க்கும்போது ரஷ்ய பொம்மை போல இருப்பதா நாசா விஞ்ஞானிகள் வர்ணிக்கின்றனர்.

ப்ளூட்டோவின் மிகப் பெரிய நிலாவின் பெயர் செரன். இது 648 மைல் தூரத்தில் உள்ளது. இதை 1978ம் ஆண்டு கண்டுபிடித்தனர். இன்னொரு நிலாவான நிக்ஸ் 20 மைல் தொலைவிலும், ஹைட்ரா 60 மைல் தூரத்திலும் உள்ளது. இந்த இரண்டும் 2005ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த ஆண்டு 4வது நிலா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஐந்தாவது நிலவும் ப்ளுட்டோவைச் சுற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply