குறைந்த விலையில் அசத்தலான லேப்டாப்பை களமிறக்கும் ஏசர்

Loading...

குறைந்த விலையில் அசத்தலான லேப்டாப்பை களமிறக்கும் ஏசர்ஏசர் சமீபத்தில் தனது புதிய நோட்புக்கை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த நோட்புக்கிற்கு ஏசர் அஸ்பயர் இ1 571 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த நோட்புக் சூப்பரான டிசைன் மற்றும் அசத்தலான தொழில் நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் இது குறைந்த விலையி்ல் வருகிறது. அதாவது இது ரூ.30,000க்கும் குறைவாக விற்கப்பட இருக்கிறது.

இந்த லேப்டாப் விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதோடு இது இன்டல் கோர் ஐ3 – 2350எம் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் 15.6 இன்ச் அளவில் ஒரு சூப்பரான டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேயில் படங்கள் மற்றும் வீடியோக்களம் மிகத் துல்லியமாகத் தெரியும்.

இந்த லேப்டாப்பின் உச்சியில் இருக்கும் வெப்காம் மூலம் வீடியோ உரையாடலை நேர்த்தியாக நடத்த முடியும். இதன் அடிப்பகுதியில் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் ப்ராசஸர் 2.3 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகத்தை வழங்குகிறது. மேலும் இதன் 2ஜிபி ரேம் மற்றும் 500 ஜிபி ஹார்ட் ட்ரைவ் ஆகியவை இந்த லேப்டாப்பிற்கு கணிசமான சேமிப்பை வழங்குகின்றன.

அஸ்பயர் லேப்டாப்பின் பேட்டரி இந்த லேப்டாப்பிற்கு 4 முதல் 4 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இதன் விலை ரூ.28,000 மட்டுமே.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply