குறைந்த நாட்களில் செவ்வாய்க்கு பயணிக்க ரஷ்யாவின் அதிரடி திட்டம்

Loading...

குறைந்த நாட்களில் செவ்வாய்க்கு பயணிக்க ரஷ்யாவின் அதிரடி திட்டம்விண்வெளி ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்ட நாட்தொடக்கம் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் கடும் போட்டி நிலவிவருகின்றமை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
தற்போது செவ்வாய் கிரகத்தினை கியூரியோசிட்டி ரோவர் விண்கலத்தின் உதவியுடன் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் பல கோணங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

நாசா நிறுவனத்தின் தொழில்நுட்பங்களின் ஊடாக பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு சுமார் 18 மாதங்கள் வரை எடுக்கின்றது.

இவ்வாறான நிலையில் அணுசக்தியின் உதவியுடன் வெறும் 45 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு சென்றடையும் முறைமை ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது.

இதற்கான முன்மாதிரி திட்டம் 2018ம் ஆண்டில் பரிசோதிக்கப்படும் எனவும், பின்னர் 15 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முழுமையான திட்டம் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply