கீரை புலாவ்

Loading...

கீரை புலாவ்
தேவையானவை:
பாசுமதி அரிசி சாதம் – 2 கப், வேகவைத்த கேரட், பட்டாணி, மக்காச்சோளம் (சேர்த்து) ஒரு கப், நறுக்கிய பாலக்கீரை – ஒரு கப், மிளகாய்த்தூள் – சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், பூண்டு – 8 பற்கள், பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), உடைத்த முந்திரி, சீரகம், நெய் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் நெய் விட்டு… முந்திரியை வறுத்து, சீரகம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கீரையைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், பட்டாணி, மக்காச்சோளம், கேரட் சேர்த்து வதக்கி, சாதத்தை சேர்த்து முள்கரண்டியால் கிளறவும். கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply