காஷ்மீரி ரிச் புலாவ்

Loading...

காஷ்மீரி ரிச் புலாவ்
தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சைப் பழம் கலவை – அரை கப், முந்திரி, உலர்ந்த திராட்சை – தலா 10, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 2, பட்டை, லவங்கம், ஏலக்காய் – தாளிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ – சிறிதளவு, பால் – 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு… பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, சர்க்கரை, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து வதக்கி… வடித்த சாதம், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கினால்… காஷ்மீரி ரிச் புலாவ் ரெடி!

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply