காலநிலை மாற்றங்களை பாதுகாக்கும் பவளப் பாறைகள் கண்டுபிடிப்பு

Loading...

காலநிலை மாற்றங்களை பாதுகாக்கும் பவளப் பாறைகள் கண்டுபிடிப்புசம காலத்தில் உலகெங்கிலும் கால நிலை விரைவாக மாறிவருவதனால் வெப்பம் அதிரித்து மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் மந்த வேகத்தில் மாற்றம் பெற்றுவந்த காலநிலை சமீப காலமாக வெகு விரைவான மாற்றத்திற்கு உட்பட்டுவருகின்றமை அறிந்ததே.

இவ்வாறிருக்கையில் கால நிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உலகிற்கு நல்ல செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதாவது கடல் பகுதிகளில் காணப்படும் பவளப் பாறைகளைக்கு காலநிலை மாற்றங்களை சீராகப் பேணும் அல்லது தடுக்கும் ஆற்றல் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

இப் பாறைகளில் அதிகளவில் அல்கா எனும் தாவரம் வளர்வதாகவும், அவை வளிமண்லத்தில் காபனீரொட்சைட் வாயு அதிகரிப்பை தடுப்பதுடன், தாம் வளர்வதற்கு தேவையான 33 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பநிலையை பெற்றுக்கொள்கின்றன.

இதனால் சூழல் வெப்பநிலை சீராகப் பேணப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகுவதாக தெரிவித்துள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply