கருவளையங்களைப் போக்கும் சமையலறைப் பொருட்கள்

Loading...

கருவளையங்களைப் போக்கும் சமையலறைப் பொருட்கள்கண்கள் ஆயிரம் வார்த்தைகளைப் பேசும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட கண்களைச் சுற்றி கருவளையங்கள் வந்தால், அது அவரின் அழகையே கெடுத்து, முகத்தை பொலிவிழந்து வெளிக்காட்டும். இந்த கருவளையம் ஆண், பெண் என இருபாலருக்கும் வரும். முக்கியமாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் அனைவருக்கும் இந்த பிரச்சனை அதிகம் வரும்.
கருவளையங்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை என்று சொல்லிக் கெண்டே போகலாம். இதற்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காவிட்டால், இது முகத்தை சோர்வுடன் வெளிக்காட்டுவதுடன், மிகவும் மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
கருவளையம் உள்ளது என்று கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு பராமரித்திருப்பீர்கள். ஆனால் அவற்றால் கருவளையம் இன்னும் அதிகமாகியிருக்குமே தரவி குறைந்தவாறு தெரிந்திருக்காது. ஆகவே அப்படி பணம் செலவழித்து கருவளையங்களைப் போக்குவதற்கு பதிலாக, வீட்டின் சமையலறையில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டே கருவளையங்களைப் போக்கலாம். இப்போது என்னவென்று பார்ப்போமா!!!

தக்காளி

தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதோடு, அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், தக்காளியை அரைத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், கருவளையங்கள் மறைந்துவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை சாறு எடுத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வர கருவளையம் காணாமல் போகும்.

குளிர்ந்த டீ பேக்

க்ரீன் டீ பேக்கை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த டீ பேக்கை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கருவளையம் மறைவதோடு, கண்களும் புத்துணர்ச்சி பெறும்.

குளிர்ந்த பால்

குளிர்ந்த பால் கொண்டு தினமும் முகத்தை துடைத்து எடுத்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் காட்டனை பாலில் நனைத்து, அதனை கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறையும்.

ஆரஞ்சு ஜூஸ்

தற்போது ஆரஞ்சு பழம் அதிகம் கிடைப்பதால், அதன் சாற்றினை கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவி வந்தால் கருவளையம் மறைந்து, கண்கள் அழகாக காட்சியளிக்கும்.

யோகா

மன அழுத்தத்தின் காரணமாக கருவளையம் வர வாய்ப்புள்ளது. எனவே தினமும் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா அல்லது தியானம் செய்து வந்தால், மனம் அமைதியாகி, மெதுவாக கருவளையங்களும் மறைய ஆரம்பிக்கும்.

நல்ல தூக்கம்

தூக்கம் மிகவும் இன்றியமையாதது. இரவில் தாமதமாக தூங்கினாலோ அல்லது மிகவும் குறைவான அளவு தூக்கத்தை மேற்கொண்டாலோ கருவளையம் வரும். ஆகவே தினமும் 7-8 மணிநேரம் தூக்கத்தை மேற்கொள்ளுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply