கருத்தரித்த காலங்களில் தாய்க்கு ஏற்படும் மன அழுத்தத்தினால் குழந்தைக்கு ஆபத்து

Loading...

கருத்தரித்த காலங்களில் தாய்க்கு ஏற்படும் மன அழுத்தத்தினால் குழந்தைக்கு ஆபத்துமனிதர்களில் பல நோய்களையும் உண்டாக்குவதற்கு மன அழுத்தம் பிரதானமாக விளங்குகின்றது.
தாய்மாருக்கு ஏற்படும் இந்த மன அழுத்தத்தினால் பிறக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

அதாவது குழந்தைகள் பிறக்கும்போது சராசரியாக 2.5 கிலோகிராம் எடையை உடையவர்களாக காணப்பட வேண்டும். ஆனால் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இந்த எடையை விட குறைந்த எடை கொண்டவர்களாகவே பிறக்கின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

142 கர்ப்பிணிப் பெண்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நீண்டநாள் பிரச்சினைகளால் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களில் கோர்ட்டிசோல் ஓமோன் அதிகரிப்பு தடைப்படுவதனாலேயே இப்பிரச்சினை உண்டாகின்றது என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சாதாரணமான கர்ப்பிணி தாய்மார்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு தொடக்கம் நான்கு முறை அதிகரிப்பதாகவும், இது குழந்தைகளின் வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply