கருணைக்கிழங்கு பொரித்த குருமா

Loading...

கருணைக்கிழங்கு பொரித்த குருமா
தேவையானவை:

கருணைக்கிழங்கு – 200 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, எண்ணெய் – தேவையான அளவு, கொத்துமல்லி – சிறிதளவு, உப்பு – ருசிக்கேற்ப. அரைக்க: தேங்காய்த் துருவல் – கால் கப், இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 6 பல், சோம்பு – அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, முந்திரிப்பருப்பு – 5.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கருணைக்கிழங்கை மண் போக நன்றாகக் கழுவி, தோல் சீவி, சிறு சதுரங்களாக நறுக்கவும். இதை மீண்டும் கழுவி, உப்பு, மஞ்சள்தூள் பிசறி, எண்ணெயில் சிவக்கப் பொரித்தெடுத்துக்கொள்ளவும்.
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, அரைத்த கலவையை சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். குருமா பதம் வந்ததும், வறுத்துவைத்திருக்கும் கிழங்கைப் போட்டு, உப்பு, கொத்துமல்லி சேர்த்து இறக்கவும். குருமாவில் வெந்திருக்கும் கருணைக்கிழங்கு, பனீர் போல சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

பலன்கள்:

நார்ச் சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை நீக்கி, சீரணத்தை அதிகப்படுத்தி, குடல் புற்று வருவதைத் தடுக்கும். வயிறு மற்றும் குடலின் நச்சுத்தன்மையை நீக்கி, வயிற்று உப்புசம், புளி ஏப்பத்தை விரைவில் தீர்க்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply