கம்புமாவு உருண்டை

Loading...

கம்புமாவு உருண்டை
தேவையானவை:
கம்பு மாவு – ஒரு கப், பொடித்த வெல்லம் – கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய முந்திரி – ஒரு டீஸ்பூன், ஏலக்காய் – 4.
செய்முறை:
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, அதில் கம்பு மாவைப் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். வெல்லத்தில் சிறிது நீர் விட்டுக் கரைத்து, மணல் நீக்க வடிகட்டி, கொதிக்கவைக்கவும். கெட்டியானதும், அதில் முந்திரி துருவல், ஏலக்காய்தூள், வறுத்த கம்புமாவு.. எல்லாவற்றையும் சேர்த்து, நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டிவைக்கவும். திருக்கார்த்திகைக்கு, பொரி உருண்டைக்கு பதில் வித்தியாசமான இந்த கம்புமாவு உருண்டை செய்து பாருங்களேன்! கம்புமாவு உருண்டை: வெள்ளைச் சோளமாவு, வெள்ளை சோளப்பொரி கொண்டும் இதே போல உருண்டைகள் தயாரிக்கலாம். வித்தியாசமான சுவை தரும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply