கத்தரிக்காய் புளி மசாலா

Loading...

கத்தரிக்காய் புளி மசாலா
தேவையானவை:
பிஞ்சு கத்தரிக்காய் – கால் கிலோ, புளிக்கரைசல் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – ருசிக்கேற்ப, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை – தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு, தனியா, தேங்காய்த் துருவல் – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4,
தாளிக்க:
எண்ணெய் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:
கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து வறுத்து, நைஸாகப் பொடித்துக்கொள்ளவும். கத்தரிக்காயை நீளத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வறுத்து, கத்தரிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். மூடி போட்டுவைத்து அவ்வப்போது கிளறிவிட்டால், காய் நன்றாக வதங்கிவிடும். வெந்ததும், புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்க்கவும். வறுத்துப் பொடித்த பொடியைச் சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பலன்கள்:
சீரணத்தை அதிகப்படுத்தும். மலச்சிக்கலைத் தடுக்கும். நீரிழிவு நோய் மற்றும் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த உணவு. புகைப்பழக்கத்தை விட எண்ணுபவர்கள், வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் இதைப் பயன்படுத்த, புகைபிடிக்கும் எண்ணம் குறையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply