கண் பார்த்தால் மட்டும் போதும்…கைக்கு வேளை இல்லை…!

Loading...

கண் பார்த்தால் மட்டும் போதும்…கைக்கு வேளை இல்லை…!மவுசை நகர்த்துவது உங்களுக்கு கடினமாக இருக்கிறதா?திரையைப் பார்த்தாலே போதும். நீங்கள் விரும்புகிற இடத்தைத் திரையில் தேர்வு செய்யலாம். இதற்கான தொழில்நுட்பம் வந்துவிட்டது.

நீங்கள் கணினி திரையைப் பார்க்கும்போது உங்கள் விழித்திரையின் மேல் கணினியிலிருந்து வரும் அகச்சிவப்பு ஒளிக்கதிர் விழுமாறு செய்கிறார்கள். உங்கள் பார்வை திரையின் மேல் எங்கெல்லாம் படிகிறதோ அங்கெல்லாம் உங்கள் மவுசும் நகரும். அருமையான கண்டுபிடிப்பு என்கிறீர்களா?

இந்த ஆண்டு நடைபெற்ற கணினித் தொழில் நுட்பக் கண்காட்சியில் இந்தச் சாதனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது தோஷிபா நிறுவனம். ‘ஐ ட்ராக்கர்’ என்று இதற்குப் பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

கணினி விளையாட்டு வரைகலைப் பிரியர்களுக்கு இது பெரிதும் கை கொடுக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply