கண்டுபிடிப்புகளே எமனாக மாறியது! அதிரவைக்கும் அறிவியல் பயணம்

Loading...

கண்டுபிடிப்புகளே எமனாக மாறியது! அதிரவைக்கும் அறிவியல் பயணம்கண்டுபிடிப்புகள்தான் எல்லாதுறைகளிலும் மனித முயற்சியின் உலக வளர்ச்சியாக அணிவகுக்கிறது.
அந்த கண்டுபிடிப்புகளில் பல, உருவாக்கிய பிரம்மாக்களையே அழித்திருப்பது அறிவியல் ஒரு கடினமான பயணம் என்பதை காட்டுவதாகும்.


படைப்புகளால் பலியான அறிவுஜீவிகள்

பாம்பாட்டிக்கு பாம்பு கடித்துதான் சாவு, கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பது பழமொழி. இந்த அறமொழி அறிவியலாளர்கள் வாழ்விலும் அனுபவமாகியிருப்பதுதான் ஆச்சரியம்.

கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களால் மட்டுமல்ல, அதனை செயல்படுத்தும் வகையிலும் அதை உருவாக்கும் முறையிலும் என பலவிதத்திலும் பலியாகியிருக்கின்றனர்.


மேரி கியூரியும் கதிரியக்க தனிமங்களும்

மேரி கியூரி(1867 – 1934) இவர் அறிவியல் உலகுக்கு ரேடியம், பொலோனியம் என்ற இரண்டு கதிரியக்க தனிமங்களை அதன் தாதுக்களில் இருந்து கண்டுபிடித்து கொடுத்தவர். அதற்காக இரண்டுமுறை நோபல் பரிசும் பெற்றார்.

கணவர் பியரி கியூரியோடும் அவர் மறைவுக்குப் பிறகு தனியாகவும் தனது அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார். அந்த தனிமங்களின் கதிர் வீச்சில் உள்ள தீங்குபற்றி அக்காலகட்டத்தில் அவ்வளவு விழிப்புணர்வு இல்லாததால் பாதுகாப்பாக கையாளாமல், Aplastic anemia நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.


கோட் பாராசூட் விபத்தில் பலியானவர்

கோட் பாராசூட்டை முதன் முதலாக உருவாக்கியவர் Franze Reichelt. இவர் ஒரு தையல்காரர். 1912 ல் தான் உருவாக்கிய பாராசூட்டை உலகிற்கு விளக்குவதற்காக அதை உடுத்திக்கொண்டு ஈபில் டவரிலிருந்து குதித்தார்.

துரதிர்ஷ்டவசமாக பாராசூட் விரிவடைவதில் சிக்கல் ஏற்பட்டதால் கீழே விழுந்து இறந்தார்.


நீர்மூழ்கி கப்பலில் விபத்து

ஹோரஸ் லாசன் ஹன்லி 1863 ம் ஆண்டில் தனது 40 வது வயதிலேயே நீர்மூழ்கி கப்பல் விபத்தில் இறந்தார்.

கடல் பொறியாளரும் கண்டுபிடிப்பாளருமான ஹன்லி முதல் போர் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தான் உருவாக்கிய கப்பலை பலமுறை ஆய்வுப் பயணத்துக்கு உட்படுத்தினார்.

இந்த முயற்சியில் ஏற்கனவே சிறிய விபத்துக்குள்ளாயிருந்த அந்த கப்பல் ஒருமுறை கடலின் மேற்பரப்புக்கு மீளும் தன்மையை இழந்தது. அதனால், ஹன்லியும் அவரோடு பயணித்த 7 பேரும் மூழ்கி இறந்தனர். கடற்படையால் அந்த கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


முதல் விமான விபத்து

Piletre De Rozier முதன்முதலாக ஆகாயத்தில் பறக்கும் ஊர்தியாக ஒரு பலூனை வடிவமைத்தார். அதன் சோதனை முயற்சியாக 1785 யூன் 15 அன்று Rozier மற்றும் Pierre Romain இருவரும் ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக பலூன் வெடித்து விழுந்து பலியானார்கள். முதல் விமானவிபத்தில் இறந்தவர்கள் இவர்கள்தான்.


விமானத்தில் மலையை கடந்தபோது

Aurel Vlaicu (1882- 1913) தான் சுயமாக உருவாக்கிய Vlaicu விமானத்தில் முதன்முதலாக கார்பதியான் மலையை கடக்கும் முயற்சியில் விபத்தாகி விழுந்து இறந்தார்.


விமான முயற்சியில் விபரீதம்

இஸ்மாயில் இபின் ஹம்மாத் ஜவ்ஹாரி (இறப்பு,1003- 1010) Farab லிருந்து வந்த துருக்கி அறிஞர். இவர் மரத்தாலான இரண்டு இறகுகள் மற்றும் கயிற்றின் மூலம் பறக்க முயற்சித்தார். நிஷாபூர் மசூதியின் கூரையில் விழுந்து பலியானார்.


கார் விமான கண்டுபிடிப்பில் பலி

ஹென்றி ஸ்மோலின்ஸ்கி 1973 ம் ஆண்டு, Ford pinto நிறுவனத்துக்காக கார் அடிப்படையிலான AVE Mizar விமானத்தை உருவாக்கினார். அதன் சோதனை பயண விபத்தில் இறந்தார்.

மைக்கேல் டாக்கர் மக்களுக்கு குறைந்த செலவில் வேகமாக பறக்கும் டாக்ஸியை உருவாக்கினார் அதன் சோதனை ஓட்டத்தில் 2009 ல் விபத்தாகி இறந்தார்.


ஆட்டோ மொபைல் விபத்துக்கள்

* Fred duesenberg (1876 – 1932) ஆட்டொ மொபைல் வாகனங்கள் தயாரிப்பாளரான இவர். தான் உருவாக்கிய வாகனத்தில் அதிவேக சாலை விபத்தில் பலியானார்.

* வில்லியம் நெல்சன் (1879 – 1903) ஜென்ரல் எலெக்ட்ரிகல் ஊழியரான இவர் சைக்கிளில் மோட்டாரை பொருத்தி ஒரு வாகனத்தை உருவாக்கினார். அந்த முன்மாதிரி பைக்கின் சோதனை ஓட்டத்தின்போது, உடைந்து விழுந்து இறந்தார்.

* சில்வெஸ்டர் H ரோபெர். தனது பெயரில் நீராவியால் இயங்கும் சைக்கிளை கண்டுபிடித்தார். 1869 ம் ஆண்டில் அதில் வேகமாக பயணித்தபோது, உயிர்விட்டார். அவர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது வாகனத்தின் வேகத்தால் இறந்தாரா என்று அறியமுடியாமல் போனது.

* ஜேம்ஸ் ஜிமி ஹெசெல்டென் (1948 – 2010) இவர் Segway தயாரிப்பு நிறுவனத்தை விலைக்கு வாங்கி நடத்தினார். அந்த கம்பெனியின் ஒரு வாகனம் மோதி பலியானார்.

உருவாக்கிய இயந்திரம் ஊனமாக்கியது

வில்லியம் புல்லாக் (1813 – 1867) வலை சுழல்முறையில் அச்சடிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து புகழடைந்தார்.

ஒருமுறை அந்த இயந்திரம் புதிதாக நிறுவப்படும்போது அவருடைய காலை நைத்தது. அது பெரிய காயமாகி நெடுநாட்களாக ஆறாமல் அழுகி, அதனால் ஊனமாகி முடிவாக இறந்தார்.


போலியோவில் முடங்கிய வேதியியலர்

Thomas Midgley (1889 – 1944) இவர் பொறியாளர் மற்றும் வேதியியலர். இவர் டெட்ரா எத்தில் லெட்(TEL) மற்றும் குளோரோ புளோரோ கார்பன்(CFC) என்ற இரண்டு Chemical கண்டுபிடிப்புகளால் புகழ் பெற்று இருந்தார்.

அவர் 51 வயதில் போலியோவால் கைகால்கள் கடுமையாக முடக்கப்பட்டு, நீட்டி மடக்க கூட முடியாமல் படுக்கையிலிருந்து இறங்குவதற்கு கூட கருவிகளும் ஆள் துணையும் தேவைப்பட்டது. அதேநிலையில் 55 வயதில் இறந்தார்.


தியாகமான மரணங்கள்

இந்த பிரம்மாக்களின் மரணம் பற்றிய பட்டியல் இன்னும் நீளும். ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. அது ஆயுதமில்லாத போர்க்களம் போலவே நடக்கிறது.

தாமஸ் ஆல்வா எடிசன் பல்பை கண்டுபிடித்த அனுபவத்தை கூறும்போது, 3000 முறை என் முயற்சி தோற்றது. அந்த மூவாயிரம் தவறுகளும் என்ன செய்யக்கூடாது என்ற அனுபவத்தை எனக்கு போதித்தது என்கிறார்.

பழங்களை உணவா விஷமா என கண்டறிந்த முதல் மனிதனின் முயற்சியிலும் கூட துணிவும் தியாகமும் உள்ளது.

கண்டுபிடிப்புகள் ஒரு புதிய அனுபவத்துக்குரிய பொருளாக இருப்பதால், கண்டுபிடித்தவர்களுக்கும் கூட அவ்வளவு பரிட்சயம் இருக்க வாய்ப்பில்லை அதுவும் கண்டுபிடிப்பாளர்கள் பலியாவதற்கான ஒரு காரணம்.

ஆனாலும், அது வெறும் மரணமல்ல, உலக வளர்ச்சிக்கு துணையான தியாகம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply