கண்களுக்கு அழகு தரும் புருவம்

Loading...

கண்களுக்கு அழகு தரும் புருவம்முகத்திற்கு அழகுதருவது கண்கள் என்றால் அந்த கண்களுக்கு அழகைத்தருவது புருவங்கள்.

பெண்களுக்கு கண்கள் அழகாக இருந்தால் அவர்களின் அழகு இரட்டிப்பாகும்.

ஆனால் அந்தக் கண்களை நன்கு எடுத்துக்காட்டுவது புருவங்கள் தான். கண்கள் எப்படி பேசுமோ அது போல புருவங்களும் பேசும். பெண்களின் விழிகளை கயல் மீனுக்கு உவமிப்பதுண்டு.

சிலருக்கு புருவம் குறைவாக இருக்கும் சொல்லப்போனால் சிலருக்கு புருவங்கள் இருக்கும் இடமே தெரியாது.

அதனால் அவர்கள் வெளியே செல்லும் போது புருவங்களை வரைந்து கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புருவங்கள் சரியாக வளராமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அவற்றில் சில தான் உடலில் சரியான ஹார்மோன் சுரப்பிகள் சுரக்காமல் இருப்பது, போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை மற்றும் அளவுக்கு அதிகமாக அழகு நிலையங்களுக்கு சென்று புருவங்களை வடிவமைத்தல் காரணமாக அந்த இடத்தில் முடி வளர்ச்சி தடைப்படுகின்றது.

முகத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்றான புருவங்களை சரியாக வடிவமைப்பதே பலருக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.

வில்லென வளைந்த புருவமென்று கவிஞர்கள் பெண்களின் புருவத்தை ஒப்பிடுவார்கள் பெண்களின் புருவமானது பெண்களின் முகத்தையே மாற்றி அழகாக்கும் தன்மை கொண்டது.

சாதாரண பெண்கள் கூட அழகு நிலையங்களுக்கு சென்று புருவத்தை திருத்தியவுடன் அழகாகி விடுகின்றனர். அந்த அளவிற்கு முகத்தின் வடிவமைப்பையே மாற்றும் தன்மை புருவத்திற்கு உண்டு.

இப்புருவங்களை வடிவமைக்கும் போது மிகவும் மெல்லியதாக ஷேப் செய்யாமல் சற்று திக்காக வைத்துக் கொள்ளலாம். அத்தோடு புருவங்களை த்ரேடிங் செய்ய செல்கையில் ஐபுரோ பென்சிலினால் வரைந்து கொண்டு போவது நல்லது.

ஏனென்றால் நாம் விரும்பியபடி புருவத்தை ஷேப் செய்து கொள்ளலாம். சிலருக்கு நெற்றியின் அளவைக் குறைத்துக்காட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று சில பெண்கள் எப்போதும் கவலையுடன் இருப்பார்கள்.

இவர்கள் தங்கள் நெற்றியின் அளவை குறைத்துக்காட்டுவதற்கு புருவத்தை அதற்கேற்றவாறு அமைத்துக் கொள்ள வேண்டும். தவிர புருவத்தை ஷேப் செய்வதால் மட்டும் நெற்றியை சிறியதாக காட்டமுடியாது.

நெற்றியை மறைக்கும்படி முடியை முன்புறம் விட்டு ஹேர் ஸ்டைல் பண்ணலாம். பின்னர் புருவத்தை மேலே தூக்கலாக தெரியும் படி ஷேப் செய்து கொண்டால் நெற்றியின் அகலம் தெரியும்.

புருவமுடி உதிர்ந்து விட்டதே அல்லது எனக்கு புருவத்தில் முடி இல்லையே என கவலைப்பட வேண்டாம். விளக்கெண்ணெயை லேசாக சூடு செய்து புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் முடி முளைத்து புருவங்கள் அழகாகும்.

முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும் கண்களும் தான் ஆகையால் இதில் புருவத்தின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்து முகத்திற்கு அதிக அழகு கொடுக்கு முடியும்.

வில் போன்ற புருவம் என பலரது புருவ அழகினை புகழ்வர் ஆனால் இவ்வமைப்பு எல்லா முகத்திற்கும் பொருத்தமாக இருக்காது என்பதால் முகத்திற்கு தங்கபடி புருவமிருப்பதே சிறப்பு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply