கடாய் பனீர்

Loading...

கடாய் பனீர்
தேவையானவை:
பனீர் – 250 கிராம், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி – தலா 2, பச்சை மிளகாய் – 3, தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தயக் கீரை – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கடாயில் எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி – பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். எண்ணெய் பிரியும்போது, நீளமாக நறுக்கிய பனீர் துண்டுகள் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். காய்ந்த வெந்தயக் கீரையை கையில் பொடித்து சேர்க்கவும். 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சப்பாத்தி, புலாவ், ரொட்டிக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply