ஒலியை விட ஏழு மடங்கு அதித‌ வேகத்தில் செல்லும் ‘பிரமோஸ்’ ஏவுகணை..

Loading...

ஒலியை விட ஏழு மடங்கு அதித‌ வேகத்தில் செல்லும் ‘பிரமோஸ்’ ஏவுகணை..உலகில் எந்த பகுதியையும், ஒரு மணி நேரத்திற்குள் சென்று தாக்கவல்ல, ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை, 2017ல் தயாராகும் என, விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு போட்டியாக, இந்தியா அதிநவீன ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியின் வேகத்துக்கு இணையாக செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணைகள், ஏற்கனவே சோதித்து வெற்றி காணப்பட்டுள்ளன. ரஷ்யா-இந்தியா கூட்டு தயாரிப்பில், பிரமோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இந்த கூட்டு குழுவின் தலைவர் சிவதாணு பிள்ளை, மாஸ்கோவில் கூறியதாவது ராணுவம் மற்றும் கடற்படையில் பயன்படுத்தக்கூடிய, 290 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணை, 300 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை சுமந்து செல்லும் திறன் பெற்றவை. ஒலியின் வேகத்தை போல, ஐந்து முதல் ஏழு மடங்கு அதி வேகத்துடன் செல்லும் பிரமோஸ் ஹைபர்சானிக் ஏவுகணை, தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏவுகணை தயாரிப்பு முழுமை பெற, ஐந்து ஆண்டுகள் ஆகும். உலகின் எந்த பகுதியையும், ஒரு மணி நேரத்திற்குள் சென்று தாக்கும் வல்லமை பெற்றது, இந்த ஏவுகணை. அமெரிக்காவிடம் தற்போதுள்ள, “டோமாஹாக்’ ஏவுகணை, ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக செல்லும் திறன் வாய்ந்தவை. ஆனால், தற்போது உருவாக்கப்படும் பிரமோஸ், ஒலியை விட ஏழு மடங்கு பாய்ந்து செல்லும்”. இந்த ஏவுகணை, இந்தியா மற்றும் ரஷ்யாவிடம் மட்டும் தான் இருக்கும். மூன்றாவது நாடுகளுக்கு சப்ளை செய்யப்பட மாட்டாது. இவ்வாறு சிவதாணு பிள்ளை கூறினார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply