ஒருவேளை நாம் கருந்துளைக்குள் விழுந்து விட்டால்?

Loading...

ஒருவேளை நாம் கருந்துளைக்குள் விழுந்து விட்டால்அண்டவெளியில் காணப்படும் கருந்துளை பிரபஞ்சத்தின் மிகப்பெரிய விசித்திரம்.
விடை இன்னும் காணமுடியாத ஆச்சரியமான அப்பகுதியை அறிந்துகொள்வதில் அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ஆர்வம் உண்டு.


கருந்துளையை அறிவோம்

அந்த கருந்துளை வாய்பரப்பு, சுமார் நம் பூமியை உள்ளே போடுகிற அளவுக்கு மிகப்பெரியதாக உள்ளது.

வெளியிலிருந்து பார்க்க உள்ளே ஒன்றுமே அறிய இயலாத அடர்த்தியான இருள்வெளி மட்டுமே தெரிகிறது.

அதற்கு காரணம், அந்த கருந்துளையின் மையம் முடிவில்லாத தூரமுடையது(Points at Infinity). ஒளி சென்றாலும் மீளமுடியாது. அதுவே அடர் இருளுக்கு காரணம்.

அதனுள்ளே எந்த ஒரு வடிவமோ எல்லையோ காலநேரமோ இல்லாத பயங்கரமுடையது. அது அறியமுடியாத மூர்க்கமான காலியிடமாக உள்ளது.

அறிவியலுக்கு செக் வைத்த இயற்கை சக்தியின் இருப்பிடம் எனலாம்.


அதில் விழுந்தால் என்னாவோம்

ஒருவேளை நாம் அதற்குள் சென்றால், என்னாவோம் என்பதை அறிய ஆர்வம்கொள்கின்றனர்.

கருந்துளைக்குள் அகப்பட்டால் அந்த உணர்வு ஒரு நெருக்கமானதாக இருக்கும் அது எப்படி என்றால், டூத் பேஸ்ட் அதன் குழாயிலிருந்து பிதுங்கி வழிவதுபோல இருக்கும் என American Museum of natural hystory’s hayden Planetarium த்தில் பணிபுரியும் வான் அறிவியலாளர் சார்லஸ் லியூ கூறுகிறார்.

மேலும், பூமியின் மேற்பரப்பில் திடப்பொருள்கள் உறுதியாக அசைவற்று இருக்கின்றன. ஆனால், நீர்நிலைகளில் பூமியின் ஈர்ப்புசக்திக்கும் நிலவின் குறைவான ஈர்ப்பு சக்திக்கும் இடையிலான தாக்கமே கடலில் அலைகள்.

பூமியின் உறுதியான ஈர்ப்பில் உள்ள கடலில் சந்திரனின் இருப்பு மற்றும் ஈர்ப்புக்கு ஏற்பவே அலைகள் பரவுகின்றன.

ஆதே ஒருங்கிணைப்பு விளைவுதான் கருந்துளைக்குள் நாம் அடியெடுத்து வைக்கும்போதும் ஏற்படுகிறது என்கிறார்.

நீரில் டைவ் அடிப்பதுபோல, தலையை கருந்துளைக்குள் நுழைத்து, பாதங்களை பிற்பகுதியாக்கிக் கொண்டால், நாம் தலையில் உணர்கிற ஈர்ப்பைவிட கால்விரல்களில் உணரப்படுவது குறைவாக இருக்கும்.

ஒளியின் வேகத்தில் அதனுள்ளே பயணிக்கக்கூடும். அதனுள்ளே சென்ற பிறகு, நமக்கு முன்னே பொருள் ஏதும் பயணித்தாலும் பார்க்க முடியும். அதுபோல பின்னே தொடரும் பொருளையும் பார்க்க முடியும். ஆனால், வினாடிகளுக்கும் குறைவான கால இடைவெளி கூட அளவிடமுடியாத தூர இடைவெளியை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.


கருந்துளைதான் பிரபஞ்ச மையமா?

கருந்துளைக்குள்ளே சென்று அதைப்பற்றிய ரகசியங்களை அறிந்துகொண்டால், அது பிக் பேங் உட்பட பிரபஞ்ச ரகசியங்களைப் பற்றியும் முழுமையான புரிதலை ஏற்படுத்தும் என்பது உண்மை. என்றும் கூறியுள்ளார்.

ஆன்மீகத்திலும் ஏக பிரம்மம் என்ற இருள் மூலத்திலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்று ஞானிகள் கூறியுள்ளனர். அறிவியலும் அந்த நம்பிக்கையை நோக்கியே நகர்வது ஆரோக்கியமான ஆய்வு ஒருங்கிணைப்புதான்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply