ஏப்ரலில் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்

Loading...

ஏப்ரலில் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் பற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்சின் விலை மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்த கணிப்புகளும், யூகங்களும் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்பீல் நிறுவன சி.இ.ஓ.டிம் குக் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் தொடர்பான விவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் மூன்று வித பிரிவுகளில் அறிமுகமாகிறது. மொத்தம் 38 மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் ஸ்போர்ட் எனும் மாதிரி 349 டாலருக்கு விற்பனையாக உள்ளது. இது தவிர விலை உயர்ந்த சொகுசு மாதிரிகளும் உண்டு. இவை 10,000 டாலர் முதல் 17,000 டாலர் வரை விலை கொண்டுள்ளன. சொகுசு வாட்ச் தங்கத்தாலானது.

ஏப்ரல் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளன. ஏப்ரல், 10ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகளில் முதல் கட்டமாக விற்பனைக்கு வருகிறது.

18 மணி நேரம் நீடிக்க கூடிய பேட்டரி, மேக்னடிக்கு முறையிலான சார்ஜிங் வசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன. புளுடூத் மூலம் ஐபோனுடன் இணைக்கப்படுவதால் இதிலே அழைப்புகளை பெறலாம், பேசலாம். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளும் செயல்படும். இமெயிலுக்கான நோட்டிபிகேஷன் வசதியும் இருக்கிறது.

ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருந்தால் எழுந்து நடக்க இந்த வாட்ச் நினைவூட்டும். ஸ்மார்ட்கீ மூலம் ஹோட்டல் அறைகளை திறக்கும் வசதியும் இருக்கிறது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி இருக்கிறது. டச் ஸ்கிரீன் மூலம் செயலிகளை இயக்கலாம். ஃபிட்னஸ் பிரியர்களுக்கு ஏற்ற பல அம்சங்களும் இருக்கின்றன.

ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் இந்த பிரிவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் வாட்ச் சந்தைக்கு தேவையான வளர்ச்சியை இது கொண்டு வருமா என்ற ஏக்கமும் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்கு பிறகு புதிய பிரிவில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் முதல் தயாரிப்பாக இது அமைந்துள்ளது.

ஸ்மார்ட் வாட்ச் தவிர மெல்லிய லேப்டாப்பான மேக்புக்கையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply