எங்கேயும் ஹோண்டா பெயர் இருக்கக் கூடாது ஹீரோ நிறுவனம் அதிரடி முடிவு…

Loading...

எங்கேயும் ஹோண்டா பெயர் இருக்கக் கூடாது ஹீரோ நிறுவனம் அதிரடி முடிவு…ஜப்பானின் நிறுவனமான ஹோண்டா தொழில்நுட்பத்தை பெற்றிருந்தாலும் கூட எந்த இடத்திலும் ஹோண்டா பெயர் இடம் பெற கூடாது என்பதில் ஹீரோ தீவிரமாக‌ இருக்கிறது. எனவே, ஹோண்டா பெயர் இல்லாமல் பைக்குகளை அறிமுகப்படுத்த இந்திய நிறுவனமான‌ ஹீரோ தீவிரமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு ஹீரோ ஹோண்டா குழுமத்திலிருந்து ஹோண்டா பிரிந்து சென்றது. இதைத்தொடர்ந்து, ஹீரோ நிறுவனம் மார்க்கெட்டில் தனி ஆவர்த்தனம் துவங்கியுள்ளது. புதிய தொழில்நுட்ப குழுமங்களுடன் கூட்டு சேர்ந்து வரும் ஹீரோ நிறுவனம் தற்போது புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், ஹீரோ தயாரிப்புகளில் ஹோண்டா பெயர் இருப்பதை ஹீரோ விரும்பவில்லை. வரும் 2014ம ஆண்டு வரை ஹீரோ ஹோண்டா பிராண்டை பயன்படுத்தவும், ஹோண்டாவிடமிருந்து தொழில்நுட்பத்தை பெறுவதற்கும் ஹீரோ உரிமை வாங்கியுள்ளது. இருந்தபோதிலும், தனது தயாரிப்புகளில் ஹோண்டாவின் பெயர் இடம்பெறுவதை ஹீரோ விரும்பவில்லை.

ஸ்பிளன்டர் உள்ளிட்ட பைக்குகள் ஹோண்டா பெயர் இல்லாமல் ஹீரோ என்ற பிராண்டில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதேபோன்றே, எல்லா பைக் மாடல்களிலும் ஹோண்டா பெயரை நீக்கிவிட ஹீரோ முடிவு செய்துள்ளது. எனவே, ஹீரோ ஹோண்டா பிராண்டில் இனி பைக்குகள் வராது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply