ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!

Loading...

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியமான ஒன்றாகும்.
எனவே ஊட்டச்சத்துக்கள் எந்தெந்த உணவுகளில் கிடைக்கிறதோ அதனை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

புரதச்சத்து

புரதம் தசைகளை வலுவாக்க உதவும் ஊட்டச்சத்து புரதம். இது உடல் வலிமை அதிகரிக்க பயனளிக்கிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும் உதவுகிறது. முட்டை, பால் உணவுகளில் புரதம் அதிகமாக கிடைக்கிறது.

ப்ரோ- பயோடிக்

தயிர் ஓர் சிறந்த ப்ரோ-பயோடிக் உணவு. இதிலிருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உடலில் உள்ள தீய பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. தீய பாக்டீரியாக்கள் அழியும் போது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தானாக வலுவாகிறது.

விட்டமின் சி

சிட்ரஸ் பழங்கள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பலங்களில் வைட்டமின் சி சத்து அதிகமாக கிடைக்கிறது.
சளி, ஃப்ளூ காய்ச்சல் ஏற்படும் போது விட்டமின் சியின் உதவி நிறைய தேவைப்படுகிறது. முக்கியமாக மழைக் காலங்களில் விட்டமின் சி உணவுகள் தவறாமல் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

விட்டமின் ஏ

சர்க்கரைவள்ளி கிழங்கு, கேரட், முட்டை போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ சத்து நிறைய கிடைக்கிறது. மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளின் வழியாக உடலுக்குள் பாக்டீரியா தாக்கம் எளிதாக அதிகரிக்கும். விட்டமின் ஏ இந்த பகுதிகளை வலுவாக்க உதவுகிறது.

விட்டமின் ஈ

கீரை, பாதாம் போன்ற உணவுகளில் விட்டமின் ஈ சத்து அதிகமாக இருக்கிறது. உடலில் வலுவிழந்து இருக்கும் செல்கள் புத்துணர்ச்சி அடைய விட்டமின் ஈ உதவுகிறது. செல்களின் வலிமையை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது வைட்டமின் ஈ உணவுகள்.

விட்டமின் டி

விட்டமின் டி சத்து உடலில் குறைய ஆரம்பித்தால், சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சனை வராமல் இருக்க அதிகாலை சூரிய ஒளி நமது உடலில் பட்டாலே போதும்.
இதன் மூலமாக நமது உடலுக்கு நிறைய விட்டமின் டி சத்து கிடைக்கிறது. மேலும், பால் மற்றும் தானிய உணவுகளிலும் விட்டமின் டி சத்து கிடைக்கிறது

ஜிங்க் – துத்தநாக சத்து

கடல் உணவுகள், சிக்கன், சுண்டல் போன்ற உணவுகளில் ஜிங்க் (Zinc) சத்து நிறைய இருக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள ஜிங்க் சத்து உதவுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply