உலர்பழ நட்ஸ் பர்ஃபி

Loading...

உலர்பழ நட்ஸ் பர்ஃபி
தேவையானவை:
கொட்டை நீக்கி துண்டுகளாக நறுக்கிய பேரீச்சம்பழம், அத்திப்பழம் – தலா ஒரு கப், காய்ந்த திராட்சை – கால் கப், பொடியாக நறுக்கிய செர்ரி – அரை கப், முந்திரி, பாதாம், பிஸ்தா – கால் கப் (வெறும் கடாயில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), மில்க்மெய்டு – அரை டின், சர்க்கரை தூள் – கால் கப்.
செய்முறை:
ஒரு மைக்ரோ ப்ரூஃப் பவுலில் ஒன்றிரண்டாக பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, துண்டுகளாக நறுக்கிய உலர் பழங்கள், மில்க்மெய்டு, சர்க்கரைத்தூள் சேர்த்து 8 முதல் 10 நிமிடம் (அ) கலவை கெட்டியாக ஆகும்வரை ‘மைக்ரோ ஹை’யில் சமைக்கவும். 2 நிமிடத்துக்கு ஒருமுறை கதவைத் திறந்து கிளறிவிடவும். கெட்டியானதும், நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் துண்டுகள் போடவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply