உலகின் மிக மெல்லிய லென்ஸ்!

Loading...

உலகின் மிக மெல்லிய லென்ஸ்!மனித முடியை விட 2,000 மடங்கு மிக மெல்லிய லென்ஸை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அவுஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டி என்ற பல்கலைகழகத்தை சேர்ந்த Yuerui ‘Larry’ Lu என்ற விஞ்ஞானி தலைமையிலான குழுவே இதனை உருவாக்கியுள்ளனர்.

இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட 50 நானோமீற்றர் என்ற அடர்த்திக்கும் மிகவும் குறைவாக தற்போது 6.3 நானோமீற்றர் என்ற அளவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் போன்ற துறைகளில் இதன் பயன்பாடு மிக சிறந்ததாக இருக்கும் எனவும், வளைந்த திரையை கொண்ட கணனிகளில் கூட இதனை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மடிக்கப்படக்கூடிய திரையை கொண்ட கணனிகள் மற்றும் Prototype TV -களில் ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், மிக மலியான விலையில் சாதனங்களை உருவாக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply