உருளைக்கிழங்கை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கலாமா? | Tamil Serial Today Org

உருளைக்கிழங்கை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கலாமா?

ads 1

உருளைக்கிழங்கை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கலாமாகுளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து பாதுகாப்பதால் சில உணவு வகைகளின் சுவை அதிகரிக்கின்றன, ஆனால் சில உணவுகள் நச்சுத்தன்மை அடைகின்றன.
காய்கறிகள் முதல் கீரை வகை வரை நாம் குளிர்சாதானப் பெட்டிக்குள் வைத்து அதன் பொலிவு கெடாமல் பாதுகாத்து வருவது வழமை.

ஆனால் இதில் ஒரே ஒரு உணவு பொருள் மட்டும் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைப்பதால் நமது உடலுக்கு கெடுதல் விளைவிக்கிறது.

உணவுகள் தரநிலை முகமையின் அறிவுறுத்தல் என்னவென்றால், குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து பாதுகாப்பதை தவிர்க்க வேண்டிய முக்கியமான உணவு வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு.

உருளைக்கிழங்கை நாம் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து பாதுகாப்பதால், அதில் அடங்கியிருக்கும் ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுகிறது.

அப்படி மாற்றப்பட்டிருக்கும் உருளைக்கிழங்கை நாம் சமையலுக்கு பயன்படுத்தும்போது அதிலிருக்கும் சர்க்கரையுடன் அமினோ அமிலமும் இணைந்து உடலுக்கு தீங்கினை விளைவிக்கும் Acrylamide எனும் ரசாயனம் உருவாகிறது.

இது உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் French fries ஆகியவற்றில் அதிக அளவு காணப்படுவதாகதெரிய வந்துள்ளது.

Acrylamide ரசாயனம் என்பது காகித தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை வேதிப்பொருள். இந்த வேதிப்பொருளானது உணவு வகைகளிலும் காணக்கிடக்கின்றன.

இந்த வேதிப்பொருளானது பல்வேறு தரப்பட்ட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பினை உருவாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற உணவு வகைகளை உட்கொள்வதை மருத்துவர்கள் இதுவரை விலக்கவில்லை. ஆனால் அளவுக்கு மேலதிகமாக உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு மற்றும் உணவு மற்றும் வேளான் அமைப்புகள் இது குறித்து தீவிரமாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளன.

இந்த வேதிப்பொருளின் தாக்கம் மனித உடலில் எத்தகைய மாறுதலை உருவாக்கும் என்பதை ஆய்வின் அடிப்படையிலேயே தெரிந்துகொள்ள முடியும்.

இருப்பினும், உருளைக்கிழங்கை குளிர்சாதனப் பெட்டிக்குள் பாதுகாப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என உணவுகள் தரநிலை முகமை அறிவுறுத்துகின்றது.

ads2
Rates : 0
6
7
VTST BN
9
10
11