உணர்வை சொல்லும் உதடுகள்

Loading...

உணர்வை சொல்லும் உதடுகள்ஒரு­வ­ரது முகத்தில் கண்­க­ளுக்கு இணை­யா­னவை உத­டுகள். உள்­ளத்து உணர்­வு­களை கண்கள் எப்­படிப் பிர­தி­ப­லிக்­கின்­ற­னவோ, அதே போலத்தான் உத­டு­களும். நாம் சோக­மாக இருந்தால் உத­டுகள் கீழ் நோக்­கியும் சந்­தோ­ஷப்­பட்டால் மேல் நோக்­கியும் இருக்­குமாம்.

முகத்­துக்­கான மேக்­கப்பில், உத­டு­க­ளுக்­கான கவ­னிப்பு ரொம்­பவே ஸ்பெஷல்! கொஞ்சம் அசந்­தாலும் முகத்தின் அமைப்பை மட்­டு­மின்றி, ஒட்­டு­மொத்த தோற்­றத்­தையே மாற்றிக் காட்டக் கூடி­யது லிப் மேக்கப்.

உத­டு­க­ளுக்­கான மேக்­கப்பில் அவ­சியம் அறிந்து கொள்ள வேண்­டிய விடங்கள்


உங்­க­ளுக்­கான சரி­யான லிப்ஸ்­டிக்கை எப்­படித் தேர்வு செய்­வது?

லிப்ஸ்டிக் பயன்­ப­டுத்­து­கிற பழக்­க­முள்­ள­வர்கள் எல்­லோரும் தங்கள் கைப்­பை­களில் ஒன்­றுக்கும் மேலான லிப்ஸ்டிக் வைத்­தி­ருப்­பதைப் பார்க்­கலாம்.

அவற்றில் சில ஷேடு­களை மட்­டுமே அடிக்­கடி உப­யோ­கிப்­பார்கள்.

மற்­றவைஉப­யோ­க­மற்று அப்­ப­டியே இருக்கும். அதற்­கொரு காரணம் உண்டு. கடை­களில் அடுக்கி வைத்­தி­ருக்­கிற லிப்ஸ்­டிக்கை பார்த்­ததும் அதன் ஷேடில் மயங்கி வாங்­கி­யி­ருப்­பார்கள்.

வீட்­டுக்கு வந்து உப­யோ­கித்துப் பார்த்தால் அது தனக்குப் பொருந்­தாத ஷேடு எனத் தெரிந்து உப­யோ­கிக்க மாட்­டார்கள். லிப்ஸ்­டிக்கின் நிறம் என்­பது உங்கள் சரும நிறத்தை மட்­டுமே பார்த்து வாங்­கப்­பட வேண்­டி­ய­தல்ல.


சரு­மத்தின் அண்டர்டோனை தெரிந்து கொள்­ளுங்கள்…

ஒவ்­வொ­ரு­வரின் சரு­மமும் மஞ்சள் அல்­லது பிங்க் நிறத்தில் அண்­டர்டோன் என ஒன்றைக் கொண்­டி­ருக்கும்.

மஞ்சள் என்­பது Warm கல­ரா­கவும், பிங்க் என்­பது Cool கல­ரா­கவும் கரு­தப்­படும்.

உங்­க­ளு­டைய அண்­டர்டோன் எப்­ப­டிப்­பட்­டது என்­பதைத் தெரிந்து கொள்­வது, உங்­க­ளுக்­கான சரி­யான லிப்ஸ்டிக் ஷேடை தேர்வு செய்யப் பெரிதும் உதவும்.


அது சரி… அண்­டர்­டோனை எப்­படி அடை­யாளம் காண்­பது?

அது மிகவும் எளிது. உங்கள் சரு­மத்தின் ஊடே தென்­ப­டு­கிற நரம்­புகள் நீல நிறத்தில் காணப்­பட்டால் உங்­க­ளு­டை­யது பிங்க் அண்­டர்டோன்

. அதே நரம்­புகள் பச்சை நிறத்தில் காணப்­பட்டால் மஞ்சள் அண்­டர்டோன். நீலமும், பச்­சையும் கலந்த நிறத்தில் காணப்­பட்டால் உங்­க­ளு­டை­யது நியூட்ரல் அண்­டர்டோன்.


எந்த அண்­டர்­டோ­னுக்கு எந்த ஷேடு?

மஞ்சள் அண்­டர்­டோ­னுக்கு Warmer கலர்­களே பொருந்தும். பிங்க் அண்­டர்­டோ­னுக்கு Cooler கலர்கள் சரி­யாக இருக்கும். வெளுத்த, சாம்பல் நிற ஷேடு­களை தவிர்ப்­பதே நல்­லது. அம்­மா­தி­ரி­யான ஷேடுகள் உங்கள் சரு­மத்தை ஆரோக்­கி­ய­மின்றிக் காட்டும்.


ஸ்கின்­டோ­னையும் கவ­னி­யுங்கள்…

ஒவ்­வொ­ரு­வரின் சரும நிறம் எப்­ப­டிப்­பட்­டது என்­பதைப் பொறுத்தும் இது தேர்ந்­தெ­டுக்­கப்­பட வேண்டும்.

சிவந்த சரு­மமா, மாநி­றமா, மித­மான நிறமா என்­ப­தற்­கேற்ப அவர்­க­ளுக்­கான ஷேடுகள் வேறு­படும்.


சிவந்த சருமம் கொண்­ட­வர்­க­ளுக்கு…

பிங்க், கோரல், ப்ளம், Fuschia எனப்­ப­டு­கிற அடர் ஊதா நிறம், ரோஸ், ஒரஞ்சு மற்றும் பெர்ரி ஆகிய ஷேடுகள் இவர்­க­ளுக்கு ஏற்­றவை.

சரி­யான ஷேடை தேர்வு செய்­வதைப் போலவே தர­மான பிராண்டும் முக்­கியம்.

தவ­றான பிராண்ட் மற்றும் ஷேடு, சிவந்த சருமம் கொண்­ட­வ­ரது உத­டு­களை வெளிறிப் போன மாதி­ரியும் துடைத்­து­விட்­டது மாதி­ரியும் காட்­சி­ய­ளிக்கச் செய்­து­விடும்.


மாநிறம் கொண்­ட­வர்­க­ளுக்கு…

நீல நிற­மிகள் கொண்ட ஷேடு­களை உப­யோ­கிப்­பதன் மூலம் இவர்­க­ளது தோற்­றத்­தையும் பளிச்­செனக் காட்­டலாம். ரெட், மெஜந்தா, Mauve, பிங்க், ரோஸ், காபி மற்றும் பிரவுன் ஷேடுகள் இவர்­க­ளுக்குப் பொருத்­த­மாக இருக்கும்.


மித­மான நிறம் கொண்­ட­வர்­க­ளுக்கு…

இவர்­க­ளுக்கு பெர்ரி மற்றும் Mauve ஷேடுகள் அழ­காக இருக்கும். பளிச்­சென்ற பிங்க் மற்றும் பிரவுன் ஷேடு­களை இவர்கள் தவிர்க்க வேண்டும்.

சிவந்த நிறமே சிறப்­பா­னது என்­கிற நாட்கள் மாறி­விட்­டன. மாநிறம் மற்றும் அதை­யும்­விட மட்­டான நிறம் கொண்ட எத்­த­னையோ அழ­கி­களை இந்­தியா பார்த்­து­விட்­டது.

கறுப்­பான சருமம் கொண்­ட­வர்­க­ளுக்கு மேக்கப் பொருந்­தாது என்­பதும் தவ­றான கருத்து.

இன்னும் சொல்லப் போனால் மாநி­றமே மகத்­தான நிறம். சரி­யான மேக்கப் சாத­னங்­களைத் தேர்வு செய்­வதன் மூலம் அவர்­க­ளது அழகை பல­ம­டங்கு அதி­க­ரித்துக் காட்ட முடியும். உத­டு­க­ளுக்­கான பிற மேக்கப் சாத­னங்­களைத் தேர்வு செய்யும் முறை, அட்­வான்ஸ்ட் மேக்கப் ஆகிய தக­வல்கள் அடுத்த இத­ழிலும்…


ஸ்டெப் பை ஸ்டெப் ஆக லிப்ஸ்டிக் போடும் முறை…

1. முதலில் உங்கள் உத­டு­களைத் தயார்­ப­டுத்த வேண்டும். மெல்­லிய, மிரு­து­வான பிரஷ் கொண்டு உங்கள் உத­டு­களை எக்ஸ்ஃ­போ­லியேட் செய்ய வேண்டும். சர்க்­கரைப் பாகில் பிரஷ்ஷை தொட்டு உத­டு­களைத் தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கும்.

வெது­வெ­துப்­பான தண்­ணீரில் நனைத்த துணியால் உத­டு­களைத் தொட்டுத் துடைத்து, வட்­ட­மாக மசாஜ் செய்­யவும்.

2. உத­டு­களின் மேல் தர­மான லிப் பாம் தட­வவும். எவ்­வ­ளவு நேரம் அது நீடிக்­கி­றதோ, அவ்­வ­ளவு நேரம் உத­டுகள் மிரு­து­வாக இருக்கும். உத­டு­க­ளுக்கு மேக்கப் போடு­வ­தற்கு முன்­பாக இதைச் செய்ய வேண்டும்.

3.மிக மென்­மை­யாக லிப் பாமை துடைத்து எடுக்­கவும். இதைச் செய்­யாமல் விட்டால் லிப்ஸ்டிக் சரி­யாக ஒட்­டாமல் போகும்.

4. உத­டு­களின் மேல் ஃபவுண்­டேஷன் தட­வவும். உத­டு­களை நன்கு விரித்து சிரித்­த­படி வைத்துக் கொண்டு ஃபவுண்­டேஷன் தட­வினால், இடை­வெளி இல்­லாமல் அது படியும்.

5. ஃபவுண்­டே­ஷனை ஒற்றி எடுக்­கவும்.

6.உங்கள் உத­டு­களின் இயல்­பான நிறத்­துக்கு நெருக்­க­மான ஷேடில் உள்ள லிப் பென்­சிலால் உதடுகளை லைன் செய்யவும்.

7. கிரிஸ் கிராஸ் திசையில் லிப்ஸ்டிக்கை தடவவும். உதடுகளின் நடுப்பகுதி, வெளிப்புற ஓரங்கள் மற்றும் அடிப்பகுதிகளை கவனமாக நிரப்பவும்.

8. திட்டுத்திட்டாக உள்ள இடங்களை சீராக்கும்படி லிப்ஸ்டிக்கை சரி செய்யவும்.

9. லிப்ஸ்டிக்கை ஒற்றி எடுத்து கடைசியாக இன்னொரு லேயர் தடவவும்.

10. சிறிய பிரஷ்ஷின் உதவியால் கன்சீலரை தொட்டு, உதடுகளைச் சுற்றித் திருத்தப்பட வேண்டிய இடங்களை சரி செய்யவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply