உடல் பருமன் குறைக்க வழி!

Loading...

உடல் பருமன் குறைக்க வழி!ஆண்கள், பெண்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை. இதற்கு காரணம், அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, முறையற்ற உணவுப் பழக்க வழக்கம், நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமை, வீட்டுச் சாப்பாடு இல்லாமல், பாஸ்ட் புட் உணவுகளை அதிகளவில் உண்பது போன்றவை தான் காரணம் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்களை பொறுத்தவரை, உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, சத்தான உணவு இல்லாமல் போனது ஒரு காரணம். தவிர, காலையில் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பியது முதல் மாலை அவர்கள் வீடு திரும்பும் வரை, டிவி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இத்தகைய பழக்க, வழக்கங்களால், உடலில் தேவையற்ற இடங்களில் கொழுப்பு, ஊளைச் சதை அதிகளவில் சேரும். அதனால், பல உடல் உபாதைகள் ஏற்பட வழி ஏற்படும். இவ்வாறு, உடலில், அதிகளவில் சேரும், கொழுப்பை கரைக்க, சோம்பு பயன்படுகிறது.

சோம்பு அல்லது பெருஞ்சீரகத்தை, சீன, அரேபிய, இந்தியர்கள், சமையலுக்கும், மூலிகை மருந்து தயாரிப்புக்கும், பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வருகின்றனர். வீட்டு சமையலில், வாசனைக்காக பயன்படுத்தப்படும் சோம்பு, சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பெருஞ்சீரகம், வெண்சீரகம் எனவும், அவை அழைக்கப்படுகிறது. இது, பூண்டு வகையைச் சார்ந்தது. பெரும்பாலான உணவகங்களில் சாப்பிட்டு முடித்த பின், பில்லுடன் சிறிது சோம்பும் வழங்கப்படும்.

இது, வாய் துர்நாற்றம், செரிமானத்துக்கு உதவும். தாகத்துக்கு குடிக்கும் தேவையற்ற அதிக இனிப்பு சேர்த்த பானங்களை தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரை குடிக்கலாம். இதனால், உடம்பில் உள்ள ஊளைச் சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்துக்கு வந்து விடும். கண்ட நேரத்தில் நொறுக்குத் தீனி சாப்பிடுவது மற்றும் அளவற்ற பசியை குறைக்க சோம்பு உதவுகிறது. சோம்பில் உள்ள ஒரு வகை எண்ணெய், குடல் இரைப்பை பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு; வாய்வு கோளாறு உள்ளவர்கள், சோம்பு கலந்த தேநீரை பருகுவது நல்லது.

வயிற்றுப் பிடிப்பு, அஜீரண பிரச்னைகளுக்கு, சோம்பு சிறந்த நிவாரணி. சோம்பில், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் உடலுக்கு மிகச் சிறந்தது. அதிகப்படியான நச்சு நீர், உடலில் சேர்வதை சோம்பு தேநீர் அருந்துவதன் மூலம் வெளியேற்றலாம். சிறுநீரகங்களுக்கு மிக நல்லது சோம்பு தேநீர். தொண்டை புண், இருமல் ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணி. ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வயிற்று போக்குக்கு சிறந்த மருந்து.

சோம்பு, சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பார்வை குறைபாடுகள், நுரையீரல் பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து. சிறு பிள்ளைகளுக்கு உணவு செரிமானம் ஆகாமல் வயிறு வலி ஏற்படும் போது, சோம்பு நீரை தருவது, அவர்களுக்கு நிவாரணமாக இருக்கும். சோம்பு நீரை கொடுத்தால் விக்கல் நிற்கும். ரத்த சோகைக்கு சிறந்த மருந்து சோம்பு.
குடலில் உள்ள சிறு புழுக்களை சோம்பு அழிக்கும்.வாயின் உட்புறம் ஏற்படும், சிறு புண்களை குணமாக்குகிறது. கர்ப்பிணிகள், சோம்பு தேநீரை குடிக்க கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply