உடல் எடையை குறைக்க போறீங்களா? இதோ உங்களுக்கான பழங்கள்

Loading...

உடல் எடையை குறைக்க போறீங்களா இதோ உங்களுக்கான பழங்கள்உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியது அவசியம்.
எடையை அதிகரிக்க நினைப்போர் சர்க்கரை அதிகம் உள்ள பழங்களையும், எடையை குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரை குறைவாக உள்ள பழங்களையும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

* தினமும் காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை பழத்தை ஜூஸ் போட்டு வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை வேகமாக குறையும்.

* ப்ளாக்பெரியில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால் டயட்டில் இருக்கும் போது இதனை உட்கொள்ளலாம்.

* இதேபோன்று வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தை உட்கொள்ளலாம்.

* பொட்டாசியம், வைட்டமின் சி அதிகமுள்ள அதேநேரத்தில் சர்க்கரை குறைவாகவுள்ள பப்பாளி பழத்தை சாப்பிட்டாலும் உடல் எடை குறையும்.

* தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்தும், 10 சதவீதம் சர்க்கரையும் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டால், வயிறு விரைவில் நிறைவதோடு, உடல் எடையும் குறையும்.

* உட‌ற்பருமனாக இரு‌ப்பவ‌ர்க‌ள் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வ‌ந்தா‌ல் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு ஒரு ‌நிலையான தன்மைக்கு வருவதால் உடற்பருமன் குறைவதாக மரு‌த்துவ ஆ‌ய்வுக‌ள் தெரிவிக்கின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply