உங்க சருமம் வறட்சியா இருக்கா அப்போ நீங்க இந்த காஸ்மெடிக்ஸ் எல்லாம் பயன்படுத்தாதீங்க

Loading...

உங்க சருமம் வறட்சியா இருக்கா  அப்போ நீங்க இந்த காஸ்மெடிக்ஸ் எல்லாம் பயன்படுத்தாதீங்கதொலைகாட்சியில் வரும் விளம்பரங்களில், நீங்கள் இந்த க்ரீமை உபயோகப்படுத்தினால் உடனே உங்களது முகம் மாசு மருவற்று பொலிவடையும் என கிராபிக்ஸ் செய்த ஒரு வீடியோவை ஒளிபரப்புவார்கள். உண்மை என்னவெனில் நீங்கள் உபயோகப்படுத்தும் அழகு சாதன பொருள் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் சரி, செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் சரி ஒரு அழகு சாதன பொருள் அனைத்து வகையான சருமத்திற்கும் பலனளிக்காது.
எண்ணெய் சருமம், வறட்சியான சருமம், சாதாரணமான நிலையுடைய சருமம் என சரும வகைகள் இருப்பது நாம் அறிந்ததுதான். ஒரு சிலருக்கு பயனளிக்கும் ஒரு பொருள் மற்றொருவருக்கு பயனளிக்காது. ஒருவேளை உங்கள் சருமம் வறட்சியான சருமமாக இருந்தால், கட்டாயம் நீங்கள் ஒரு சில இரசாயன கலவைகள் உள்ள அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது…

ரெட்டினாய்டு (Retinoid)

உங்கள் சருமம் வறட்சியானதாக இருந்தால், இந்த ரெட்டினாய்டின் பக்கவிளைவாக முக சுருக்கங்கள், மரு மற்றும் பருக்கள் ஏற்படும்.

பென்சோயில் பெராக்சைடு

பென்சோயில் பெராக்சைடு எனும் மூலப்பொருள் சரும எரிச்சல் மற்றும் அரிப்பை அதிகப்படுத்துகிறது.

ஆல்கஹால்

ஆல்கஹால் கலந்துள்ள கிரீம்களை வறட்சியான சருமம் உள்ளவர்கள் பயன்படுத்துவதனால் சருமம் கடினமானதாக மாறிவிட கூடும்.

சாலிசிலிக் அமிலம்

சாலிசிலிக் அமிலம் உங்கள் சருமத்தின் மென்மையை குறைத்துவிடும் என கூறப்படுகிறது.

வாசனை திரவியங்கள் மற்றும் பதப்படுத்தப்படும் பொருள்கள்

வாசனைக்காகவும், நீண்ட நாள் கெட்டு போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் வறட்சியான சருமத்தில் அழற்சிகளை ஏற்படுத்தும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply