உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அதை மறைக்க இதோ சில வழிகள்!!!

Loading...

உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா அதை மறைக்க இதோ சில வழிகள்வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க உதவும். அதற்கு அதன் குளிர்ச்சித் தன்மை தான் காரணம்.

எனவே வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

முட்டை வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவிற்கு முகத்தில் உள்ள குழிகளை மறைக்கும் சக்தி உள்ளது.

அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள குழிகளை மறைக்கலாம்.

கடலை மாவு
கடலை மாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் உள்ள பள்ளங்கள் மெதுவாக மறைவதை நன்கு காணலாம்.

பப்பாளி
பப்பாளி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மட்டுமின்றி, முகத்தில் உள்ள குழிகளையும் தான் மறைக்கப் பயன்படுகிறது.

எனவே நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவு வேண்டும்.

பாதாம் பேஸ்ட்
பாதாமில் வைட்டமின் ஈ ஏராளமாக நிறைந்துள்ளது.

இது திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவும். அதற்கு சிறிது பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

தேன் மற்றும் சர்க்கரை
தேன் மற்றும் சர்க்கரை கூட சருமத்தில் உள்ள பள்ளங்களை மறைக்க உதவும்.

அதிலும் தேன் சிறந்த டோனர் மட்டுமின்றி, சருமத்துளைகளை இறுக்கும்.

அத்தகைய தேனுடன் சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் உள்ள குழிகளும் மறையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply