உங்கள் கண்கள் அழகாகத் தெரிய வேண்டுமா?

Loading...

உங்கள் கண்கள் அழகாகத் தெரிய வேண்டுமாகண்­க­ளுக்­கான மேக்கப் சாத­னங்­களைத் தேர்வு செய்­வ­தற்கு முன் உங்கள் சரு­மத்தின் தன்­மையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சியம்.

சாதா­ரண சரு­மமா, வறண்ட சரு­மமா, எண்ணெய்ப் பசை சரு­மமா, கொம்­பி­னேஷன் சரு­மமா எனப் பார்க்க வேண்டும்.

வறண்ட சருமம் கொண்­ட­வர்­களும், சரு­மத்தில் சுருக்­கங்கள் உள்­ள­வர்­களும் க்ரீம் வடி­வி­லான ஐ ஷேடோ மற்றும் ஐ லைனர்­களை உப­யோ­கிக்­கலாம். அது அவர்­க­ளது சரு­மத்தை மென்­மை­யாகக் காட்டும்.

எண்ணெய்ப் பசை­யான மற்றும் கொம்­பினேஷன் சருமம் கொண்­ட­வர்கள் லிக்யூட் மேக்­கப்­புக்­கான கண் அழகு சாத­னங்­களைத் தேர்ந்­தெ­டுக்­கலாம்.

மிகவும் எண்ணெய்ப் பசை கொண்ட சருமம் என்றால் மேட் ஃபினிஷ் ஐ மேக்கப் சாத­னங்­களை உப­யோ­கிக்­கலாம்.

இது எண்ணெய்ப் பசையைக் கட்­டுப்­ப­டுத்தும். தவ­றான ஐ மேக்கப் சாத­னங்­களை உப­யோ­கித்தால் கண்­களின் அழகு மட்டும் கெட்டுப் போவ­தில்லை. மொத்த முக அழ­குமே மாறிப் போகும்.


ஐ பென்சில்

சில­ருக்கு புரு­வங்கள் மிக மெலி­தாக, அடர்த்­தி­யின்றி இருக்கும்.

அவர்கள் ஐ ஷேடோ மாதி­ரி­யான ஐ பென்சில் உப­யோ­கித்து புரு­வங்­களை அடர்த்­தி­யாகக் காட்­டலாம்.

மிகவும் அடர்த்­தி­யான புரு­வங்கள் கொண்­ட­வர்கள் கறுப்பு அல்­லது பிரவுன் நிற ஐ பென்சில் உப­யோ­கிக்­கலாம்.

கண்­க­ளுக்­கான அழகு சாத­னங்­களைத் தேர்வு செய்யும் போது கூடி­ய­வ­ரையில் பிர­ப­ல­மான, தர­மான தெரிவு­க­ளையே வாங்­கவும். தர­மற்ற ஐ மேக்கப் சாத­னங்கள், மிகச் சுல­ப­மாக உங்கள் கண்­களில் இன்ஃ­பெக்‌­ஷனை ஏற்­ப­டுத்தி, அதன் விளை­வாக கண் சம்­பந்­தப்­பட்ட பிரச்சி­னை­களை உரு­வாக்கும்.

கண்­க­ளுக்கு ேவாட்டர் ப்ரூஃப் ஐ மேக்கப் உப­யோ­கிக்கும் போது ஐ மேக்கப் ரிமூவர் உப­யோ­கிக்க வேண்­டி­யது மிக மிக முக்­கியம். இது லிக்யுட் மற்றும் ஜெல் வடிவில் கிடைக்­கி­றது.

எண்ணெய்ப் பசை­யான சருமம் உள்­ள­வர்கள் ஜெல் ஐ மேக்கப் ரிமூ­வ­ரையும் மற்­ற­வர்கள் லிக்யுட் ரிமூ­வ­ரையும் உப­யோ­கிக்­கலாம். இரண்­டுமே பிர­பல தெரிவுகளில் கிடைக்­கின்­றன.


ஐ ஷேடோ

ஐ ஷேடோ தேர்வு செய்யும் போது உடையின் நிறம் முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­பட வேண்டும். மெரூனும் கோல்டும், சில்­வரும் ப்ளூவும், கறுப்பும் ப்ளூவும் சிறந்த கொம்­பி­னே­ஷன்கள்.

சில பெண்­களின் மாநி­றத்­துக்கு டார்க் ஷேட் ஐ ஷேடோக்கள் பொருத்­த­மாக இருக்கும்.

இந்த டார்க் ஷேட்­க­ளுடன் கோல்ட் அல்­லது சில்வர் ஷிம்மர் கொஞ்சம் கலந்து உப­யோ­கித்தால் கண்கள் இன்னும் பிர­கா­ச­மாக, அழ­காகத் தெரியும்.


ஐ லைனர்

கண்கள் அழ­காகத் தெரிய வேண்டும்… அவ்­வ­ள­வுதான் என நினைத்தால் பென்சில் ஐ லைனர் உப­யோ­கிக்­கலாம். இது வோட்டர் ப்ரூஃபிலும் கிடைக்­கி­றது.

அழ­காகத் தெரி­வ­தோடு, சம்திங் ஸ்பெஷ­லா­கவும் தெரிய வேண்டும் என்றால் லிக்யுட் லைனர் உப­யோ­கிக்­கலாம்.

இதை வரைந்து பழ­கு­வது சற்றே சிர­ம­மா­ன­துதான் என்­றாலும் பழ­கி­விட்டால் கண்­களின் அழகு உங்கள் கைவசம்!சம்திங் ஸ்பெஷல் மட்­டு­மின்றி, மற்­றவர் பார்­வையும் உங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என நினைத்தால், கேக் ஐ லைனர் உப­யோ­கிக்­கலாம்.

மேக்கப் கலை­ஞர்­களின் சொய்ஸ் இந்த கேக் ஐ லைனர்தான்.

மஸ்­காரா

முதலில் உங்­க­ளு­டைய இமை­களின் தோற்றம் எப்­ப­டி­யி­ருக்­கி­றது எனப் பார்க்க வேண்டும்.

மெலி­தான, அடர்த்­தியே இல்­லாத இமை­களா, அடர்த்­தி­யான கரு­க­ரு­வென்ற இமை­களா அல்­லது இரண்­டுக்கும் இடைப்­பட்­ட­வையா எனப் பார்த்தே மஸ்­காரா தேர்வு செய்­யப்­பட வேண்டும்.

மெல்­லிய அடர்த்­தி­யற்ற இமை­க­ளுக்கு பட்­டை­யான நுனிகள் கொண்ட பிரஷ் வைத்த வொல்­யூ­மைசிங் மஸ்­காரா சிறந்­தது.அடர்த்­தி­யான இமைகள் இருந்தால் மெல்­லிய நுனி­க­ளு­ட­னான பிரஷ் கொண்ட மஸ்­காரா போதும்.

இரண்­டுக்கும் இடைப்­பட்ட இமை­க­ளுக்கு எந்த மாதி­ரி­யான மஸ்­கா­ராவும் பொருந்திப் போகும்.

மஸ்­காரா உப­யோ­கிக்­கி­ற­வர்கள், இரவு படுக்கும் முன் அதை ஐ மேக்கப் ரிமூவர் கொண்டு அகற்றி விட வேண்­டி­யது மிக முக்­கியம்.

இவை தவிர 3 வாரங்கள் வரை அழி­யாமல் இருக்கும் இமை­கள்­கூட இப்­போது பிர­ப­ல­மாகி வரு­கின்­றன.

அழகுக் கலை நிபு­ணரின் ஆலோ­ச­னையின் பேரில் அதை உப­யோ­கிக்­கலாம்.


பொது­வான ஐ மேக்கப் டிப்ஸ்…

புரு­வங்­களில் உரோமங்கள் இல்­லா­த­வர்கள், அதை மறைப்­ப­தற்­காக ஐ ப்ரோ பென்சில் கொண்டு பட்­டை­யாகத் தீட்டிக் கொள்­வார்கள். இது செயற்­கை­யான தோற்­றத்தைக் கொடுக்கும்.

அதைத் தவிர்த்து, புரு­வங்­களின் நிறத்­தை­விட சற்றே லைட் ஷேட் பென்சில் கொண்டு, புரு­வங்கள் வளர்ந்­துள்ள திசை­யி­லேயே புருவ முடி­களைப் போல இலேசாக வரைந்து விட்டால் இயற்­கை­யாகத் தெரியும்.

கறுப்பு நிற ஐ லைன­ருக்கு பதில் பிரவுன் ஷேட் ஐ லைனரை உப­யோ­கிப்­பது உங்கள் கண்­களை இன்னும் அழ­காகக் காட்டும். கண்­களின் வடி­வத்தை எடுப்­பா­கவும் அதே நேரம் கண்­களில் ஒரு மென்­மை­யையும் காட்டும்.

கண்­க­ளுக்கு மேக்கப் செய்யும் போது, இமை­களை ஐ லேஷ் கர்லர் கொண்டு சுருட்­டி­விடத் தவ­றா­தீர்கள்.

இரவு தூங்கச் செல்­வ­தற்கு முன் கண்­களில் எந்த மேக்­கப்பும் இருக்கக் கூடாது.

அதேபோல நீண்ட நேரம் கண்­களில் ஐ ஷேடோவும் மஸ்­கா­ராவும் போட்டுக் கொண்­டி­ருப்­ப­தையும் தவிர்க்­கவும்.

கண்­க­ளுக்கு மேக்கப் செய்­கிற போது கரு­வ­ளை­யங்­களை கன்­சீலர் கொண்டு மறைக்க வேண்­டி­யது அவ­சியம்.

அதை மறைக்­காமல் செய்­கிற ஐ மேக்கப் உங்­களை வயது முதிர்ந்­த­வ­ராகக் காட்டும்.

ஐ மேக்கப் என்பது பகல், இரவு, வயது என பல விடயங்களைப் பொறுத்தது. உதாரணத்துக்கு இரவு நேரத்தில் கொஞ்சம் அதிகமான ஐ மேக்கப் அசிங்கமாகத் தெரியாது. ஆனால், பகல் நேரங்களில் மிதமாகவே செய்ய வேண்டும்.

அதேபோல 20 வயதுக்கான கலர்கள் மற்றும் ஷேடுகள் 30 வயதினருக்கும், 30 வயதுக்கானவை 40 வயதுக்காரர்களுக்கும் பொருந்தாது.

அவரவர் வயது மற்றும் சருமத்தின் தன்மை அறிந்தே ஐ மேக்கப் செய்யப்பட வேண்டும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply