உங்கள் ஐ போன் ஸ்ரக் ஆகிவிட்டதா எப்படி சரி செய்வது

Loading...

உங்கள் ஐ போன் ஸ்ரக் ஆகிவிட்டதா எப்படி சரி செய்வதுபெரும்பாலான இளைஞர்களின் இன்றைய கனவாக இருப்பது ஒரு ஐ போனுக்கு உரிமையாளர் ஆகவேண்டும் என்பதுதான்.

என்னதான் ஐ போன் பெறுமதிமிக்கதாய் இருந்தாலும் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் வருவது தவிர்க்கமுடியாதது.

சில சமயங்களில் ஐ போன் தொடுதிரை, பொத்தான்கள் அனைத்தும் இயங்காமல் அப்படியே ஸ்ரக் ஆகிவிடும்.

நாம் பயன்படுத்தும் ஏனைய போன்கள் என்றால் பற்றரியை கழற்றிவிட்டு மீள இணைத்து on பண்ணினால் சரியாகிவிடும். ஐ போனில் பற்றரி உள்ளே வைத்து (in Built) தயாரிக்கப்பட்டுள்ளதால் அவ்வாறு செய்ய இயலாது.

முதலில் சாதாரணமாக ஐ போனை Switch off செய்து மீண்டும் Switch on செய்யவும். அதற்கு பிரச்சினை தீரவில்லை என்றால் அப்பிள் நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட இன்னோர் வழி உள்ளது.

ஐ போனின் மேல் பகுதியில் உள்ள Sleep பொத்தானையும், கீழ் பகுதியில் உள்ள Home பொத்தானையும் ஒரே நேரத்தில், போன் Switch off ஆகி மீண்டும் திரையில் அப்பிள் லோகோ தோன்றும் வரை அழுத்திப் பிடிக்கவும்.

அவ்வளவும் தான், பிரச்சினை தீர்ந்துவிடும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply