உங்கள் அலுவலகங்களில் குடியேற வருகிறது காகிதத்தை மறு சுழற்சி செய்யும் இயந்திரம்

Loading...

உங்கள் அலுவலகங்களில் குடியேற வருகிறது காகிதத்தை மறு சுழற்சி செய்யும் இயந்திரம்குடிநீர் மற்றும் பிளாஸ்ட்டிக் பொருள்கள் போன்றவற்றை மட்டுமே மறு சுழற்சி செய்து பயன்படுத்திக் கொண்டு வந்த நிலையில் தற்போது காகிதத்தையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் ஒரு இயந்திரத்தை தற்போது ஜப்பான் நாட்டினர் கண்டறிந்துள்ளனர். இதன் வழியே காகித குப்பைகளை மறுசுழற்சி செய்து சில நிமிடங்களில், பயன்படுத்தக் கூடிய வெள்ளைக் காகிதமாக பெறலாம். தேவையில்லாத காகிதங்களை அப்புறப்படுத்துவதால் ஒருவேளை மிக முக்கிய காகிதங்களையும் அளித்து விட்டால் என்ன செய்வது என்று வருந்த வேண்டாம். இதற்காகவே ஒவ்வொரு முறையும் அளிக்கப்படும் காகிதங்களில் உள்ள அனைத்து தகவல்களும் இந்த எந்திரத்தில் டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக் கொள்கிறது. அதனால் நமக்கு வேண்டிய முக்கியமான தரவுகளை எந்நேரத்திலும் பெறலாம்.

சாதரணமாக காகித மறு சுழற்சி செய்யும் எந்திரத்தில் ஒரு காகிதத்தை உருவாக்க ஒரு குவளை தண்ணீரை ஊற்ற வேண்டியிருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த இயந்திரத்தில் தண்ணீரையே சேர்க்காமல் உலர் முறையை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் காகிதத்தை செலுத்தியதும் காகிதத் துகள்கள் பொடியாக்கப்பட்டு அவை புதிதான வெள்ளைக் காகிதங்களை தருகிறது. இதுபோன்ற 6,720 காகிதங்களை எட்டு மணி நேரத்தில் தயார் செய்து தரும் சக்தி கொண்டது இவ்வியந்திரம். மேலும் உலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படுவதினால் மறுசுழற்சிக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்படும். இந்நிறுவனம் இந்த காகித மறுசுழற்சி எந்திரத்தினை இவ்வருடம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த எந்திரத்தை பற்றிய விலையினைப் பற்றி எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவை பொருத்தவரையில் இந்த எந்திரம் ஓரிரு வருடங்களில் சந்தைக்கு என எதிர்பார்க்கலாம். இந்த காகித மறுசுழற்சி எந்திரத்தை எதிர்காலத்தில் அனைத்து அலுவலகங்களிலும் இருக்கும் தேநீர் மற்றும் குடிநீர் எந்திரங்களின் அருகில் காணலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply