உங்களுக்காக புதிய ‘ஹுவெய்’ டேப்லெட் பல அறிய வசதிகளுடன்…..

Loading...

உங்களுக்காக புதிய ‘ஹுவெய்’ டேப்லெட் பல அறிய வசதிகளுடன்…..பல புதிய வசதிகளை வழங்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய டேப்லெட்டை விரைவில் அறிமுகப்படுத்துகிறது ஹுவெய்.

சீனாவைச் சேர்ந்த ஹூவாய் டெக்னாலஜிஸ் கோ லிமிடெட் உலக மொபைல் தயாரிப்பாளர்கள் வரிசையில் முதல் 6 இடத்தில் இருக்கிறது. தற்போது இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய ஒரு புதிய டேப்லெட்டை தயாரித்து வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

அதன் மூலம் உலக டேப்லெட் சந்தையில் தங்களது பங்களிப்பை இன்னும் அதிகரிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் அதற்கான விளம்பரத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழிக்க இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறது.

ஹூவாயின் விற்பனை மேலாளர் ஷா யங் கூறும்போது தமது நிறுவனம் பொது மக்களின் அருகில் சென்று அவர்களை சரியாகப் புரிந்து கொள்ள முனைவதாக கூறுகின்றார்.

இந்த வருடம் மட்டும் உலக அளவில் சுமார் 60 மில்லியன் ஸ்மார்ட் போன்களை களமிறக்க ஹூவாய் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. கடந்த வருடம் 20 மில்லியன் போன்களை களமிறக்கிய அந்நிறுவனம் 2010ல் 3 மில்லியன் போன்களைக் களமிறக்கிது.

1987ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் வர்த்தகம் நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த புதிய விண்டோஸ் போன் மூலம் அதன் வர்த்தகம் மேலும் விருத்தி அடையும் என நம்பலாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply