உங்களது குழந்தைக்கு நீங்கள் barcode பதிப்பீர்களா?!!

Loading...

Woman Seeing Bar Code --- Image by © Colin Anderson/CorbisBarcode மற்றும் மைக்ரோசிப்கள் இப்போது எங்கும் எதிலும் காணப்படுகின்றன. அடுத்தது மனிதனில்தான் என்றால் எப்படியிருக்கும்?

பிள்ளைகள் பிறக்கும்போதே அவற்றிற்கு ஒரு barcode இனைப் பதிவது நன்மை பயக்குமா என்ற வாதத்தில் பங்கேற்று அனைவரதும் கவனத்தையும் ஈர்த்திருந்தார் அமெரிக்க அறிவியல் நூலாசிரியர் எலிசபெத் மூன்.

இது மனிதர்களை அடையாளங்காண்பதற்கு இலகுவாக இருக்குமென்றார் இவர்.

தற்போது பயன்படுத்தப்படும் வீடியோ கமெராக்கள் மற்றும் DNA பரிசோதனைகள் மிகவும் மெதுவானதும் பெறுமதியானதுமாகும். இதனால் ஒரு குழந்தை பிறக்கும்போதே அதில் ஒரு barcode இனைப் பதிப்பது இவற்றிற்கு இலகுவான வழியாகுமென்றார்.

எனினும் ஒருவரில் ஒரு பதிவைச் செய்யும்போது அது அவர் எங்கு சென்றாலும் ஓர் அச்சத்தினைத் தரும் விடயமாக இருக்கும்.

இந்த barcode கள் இல்லாமலே அமெரிக்காவின் புதிய கடவுச்சீட்டுகளில் வானொலி அதிர்வெண்கள் காணப்படுவதாகவும் இதில் ஒரு நபரின் படம் உட்பட அனைத்து விபரங்களும் உள்ளடக்கப்படுகின்றனவென்றும் அமெரிக்க சிவில் லிபெட்டி அமைப்பின் ஆய்வாளர் தெரிவித்தார்.

2002 இலும் VeriChip என்ற ஒரு அடையாள சிப்பினை உடலிற்குள் பொதிப்பதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதியளித்திருந்தது. இந்த சிப்பினால் அதனைப் பயன்படுத்தும் நபரின் விடயங்கள் காணப்படும்.

இதைவிடவும் மைக்ரோசிப்ஸ் என்ற உயிரியல் ஆய்வுநிறுவனத்தினால் மருத்துவ ஆய்வுகளுக்காகத் தகவல்களைத் தெரிந்துகொள்ள நோயாளிகளின் உடலில் இதனைப் பதிக்கும் முறையைப் பயன்படுத்தியிருந்தது.

எனினும் தற்போது கணினி யுகத்தினால் அனோனிமசினால் ஒருவரது தகவல்கள் களவாடப்பட்டால் என்னாகும்? எமக்கு இவற்றால் பாதுகாப்பிருக்கும், வசதியிருக்குமென்றெல்லாம் கூறுபவர்கள் இதற்கு என்ன பதில் கூறுவார்கள் என்று கேட்கின்றனர் ஏனையவர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply