ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை களமிறக்க ஃபோர்டு ஆயத்தம்!

Loading...

ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை களமிறக்க ஃபோர்டு ஆயத்தம்!ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகளை ஃபோர்டு மேற்க்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு இறுதியில்தான் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர ஃபோர்டு திட்டமிட்டிருந்தது. ஆனால், இதே ரகத்தை சேர்ந்த டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவியை ரூ.7 லட்சத்தில் களமிறக்க ரினால்ட் தயாராகிவிட்டதாக கசிந்துள்ள தகவலால் ஃபோர்டு உஷாரடைந்துள்ளது.

மேலும், டீசல் மாடலை பின்னர் அறிமுகம் செய்யலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டது ஃபோர்டு. எனவே, முதலில் ஈக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஈக்கோஸ்போர்ட்டை விற்பனைக்கு விட ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1.6 லிட்டர் எஞ்சினுக்குரிய ஆற்றலையும், அதிக மைலேஜையும் கொடுக்கும் என்பதே புதிய 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினின் சிறப்பு. எனவே, ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படும் ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் எஞ்சினின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போதே எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை. 5 பேர் செல்லும் வசதிகொண்ட காம்பெக்ட் எஸ்யூவியான ஈக்கோஸ்போர்ட் ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்டதாக மார்க்கெட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply