இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க…

Loading...

இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க…சிலர் இரவில் தூக்கம் வராமல் அவஸ்தைப்படுவார்கள். இந்நிலை நீடித்தால், உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே ஒருவர் தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்டு வந்தால், உடனே அதற்கான தீர்வு என்னவென்று தேட வேண்டும்.
ஒருவருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேர தூக்கம் அவசியம். அந்த தூக்கம் கிடைக்காமல் போனால், மன அழுத்தம், முகப்பரு, சோர்வு, கவனச்சிதறல், மன இறுக்கம் போன்றவற்றை சந்திக்க வேண்டியிருக்கும்.
இங்கு இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும் உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அந்த உணவுகளை தினமும் உட்கொண்டு வர நல்ல தூக்கத்தைப் பெறலாம்.


தயிர்

தூக்கமின்மை பிரச்சனைக்கு தயிர் நல்ல தீர்வை வழங்கும். தயிர் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவுவதோடு, உணவில் உள்ள உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் உறிஞ்சவும் உதவும். ஒருவர் தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு 3 கப் தயிர் உட்கொள்ள அப்பிரச்சனை நீங்கும்.


குங்குமப்பூ

குங்குமப்பூவும் தூக்கமின்மைக்கு தீர்வளிக்கும். அதற்கு இரவில் படுக்கும் முன் பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து தினமும் குடிக்க நல்ல தூக்கம் வரும்.


வாழைப்பழம்

வாழைப்பழம் தூக்கத்தை வரவழைக்கும் ஓர் பொருள். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தூக்கத்திற்கு காரணமான அமினோ அமிலமான ட்ரிப்டோஃபேனும் உள்ளது. மேலும் வாழைப்பழத்தை உட்கொண்ல், நியூரான்கள் அமைதியடைந்து, இரவில் மூளையின் செயல்பாடு குறைய ஆரம்பிக்கும். ஆகவே இரவில் தூங்கும் முன் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ளுங்கள்.


பாதாம்

பாதாமில் கால்சியம் மற்றும் மக்னீசியம் வளமாக உள்ளது. இவை தசைகளின் ஆரோக்கியத்திற்கும், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவும். எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை உட்கொண்டு வாருங்கள்.


தேன்

தேனில் தூக்கத்தை வரவழைக்கும் அமினோ அமிலமான ட்ரிப்டோஃபேன் உள்ளது. எனவே இரவில் ஆழ்ந்த உறக்கம் வேண்டுமானால், தூங்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து பருகுங்கள்.


சீரக டீ

ஆயுர்வேதத்தில் சீரகம் தூக்கமின்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டால், இரவில் நீரில் சீரகத்தைப் போட்டு, கொதிக்க வைத்து தேன் கலந்து, அதனை குடித்து வர, இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply