இரத்த அழுத்தம் குறைய பழம்பாசி

Loading...

இரத்த அழுத்தம் குறைய பழம்பாசிபொதுவான குணம் பழம்பாசி ஒருசிறிய செடியாகும். இதன் இலைகள் இதைய வடிவமாக பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் கரு
மஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக இருக்கும்.
ஆங்கிலப் பெயர் -: SIDA CARDIFOLIA.
தாவரக்குடும்பம் -: MALUACEAE

மருத்துவக் குணங்கள் :

பழம்பாசியின் இலை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல், உடலின் எடையை குறையச்செய்தல், இரத்த அழுத்தம் குறையச் செய்தல் காச்சல், நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, வலிப்புகளைப் போக்கல் போன்ற குணங்களையுடையது. வேர் எண்ணெய் காயத்தைக்
குணமடையச் செய்யும் தன்மையுடையது.
இதன் இலையுடன் சிறிது பச்சரிசி சேர்தரைத்துக் குழப்பிக் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.
20 கிராம் இலையைப் பொடியாய் அரிந்து அரை லிட்டர் பாலில் போட்டு வேக வைத்து வடிகட்டிச் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து 3 வேளை சாப்பிட மூலச்சுடு தணியும்.
இதை 20 மி.லி. அளவாகக் குழந்தைகளுக்குக் காலை மாலை கொடுத்து வர இரத்தக் கழிசல், சீதக்கழிசல், ஆசனம் வெளித்தள்ளல் ஆகியவை தீரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply