இன்று மகா சிவராத்திரி

Loading...

மகா சிவராத்திரி

உலக வாழ் இந்துக்களால் இன்று மகா சிவராத்திரி அனுஸ்டிக்கப்படுகின்றது.இந்துக்களால் சிவனுக்குரிய விசேட விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி திதியில் இரவில் அனுஸ்டிக்கப்படும்.

இதன் நோன்பு முறைகளை மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறப்பு நூல் கொண்டுள்ளது.
சிவராத்திரி விரதம் ஐந்து வகைகளை கொண்டுள்ளது.

நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு ‘மாத சிவராத்திரி’ என அழைக்கப்படுகின்றது.

சிவனடியார்கள் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும்.

அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி, பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு சிவ பக்தர்கள் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து அபிஷேங்களை மேற்கொள்ள முடியும்.

சிவராத்திரி விரதத்தைப் பற்றிய பல ஐதீகங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தில் ஒடுங்கின.
உலகங்களே தோன்றவில்லை.
இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை, அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தார்.

அதன்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.
அப்பொழுது உமையவள், சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் ‘சிவராத்திரி’ என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வேண்டினார்.
அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்று பிராத்தித்தார்.
இறைவனும் அவ்வாறே அருள் புரிந்தார்.
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் ஆகியோர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றதாக கூறப்படுகின்றது.
இதன் அடிப்படையிலேயே சிவராத்திரி விரதம் தோன்றியதாக நம்பப்படுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply