இனி உலங்குவானூர்தியிலிருந்து 3D ஆக Google Maps ஐப் பார்க்கலாம்!

Loading...

இனி உலங்குவானூர்தியிலிருந்து 3D ஆக Google Maps ஐப் பார்க்கலாம்!முழுமையான முப்பரிமாண (3D) முறையினை கூகிள் வரைபடங்கள் வெளிப்படுத்துமென கூகிள் அறிவித்துள்ளது.

கூகிள் தனது விமானங்களை உலகெங்கிலுமுள்ள நகரங்களின் மேலே பறக்கவிட்டு ஒவ்வொரு முப்பரிமாணத் தகவல்களையும் நிழற்படங்களையும் பதிந்தது. இதில் மரங்கள்கூட முப்பரிமாணத்தினைப் பெற்றுள்ளன.

இது கூகிளின் சர்ச்சைக்குரிய திட்டத்தின் அடுத்த கட்டமாகும். இத்திட்டம் இவ்வருட இறுதியில் செயற்பாட்டிற்கு வருமெனக் கூறப்படுகின்றது.

எனினும், iPhone மற்றும் iPad பயனாளர்களின் பயன்பாட்டில் இழப்பு ஏற்பட்டதால் அதனைச் சரிப்படுத்த கூகிள் வரைபடத்திற்கு கூகிளும் தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளது. Apple கூகிளிற்குப் போட்டியாக ஒரு வரைபட முறையை வெளியிட்டிருந்தது.

கூகிள் வரைபடத்திற்கெதிராக அதனை வீழ்த்தும் நோக்கில் அப்பிள் அடுத்த வாரம் ஒரு நகர்வினை மேற்கொள்ளுமென ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கூகிளினால் பதியப்படும் நகரங்கள் பற்றி வெளியிடப்படவில்லையெனினும், அதில் சான்பிரான்சிஸ்கோ நகரின் படங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதனால் இந்நகரை ஒருவர் உலங்குவானூர்தியிலிருந்து பார்ப்பதுபோல மேலிருந்து பார்க்கலாம்.

அப்பிள் கூகிள் வரைபடத்தினை iPhone மற்றும் iPad இலிருந்து வெளியேற்றுமாயின் இதுதான் இவ்விரு முன்னாள் நட்பு நிறுவனங்களதும் இறுதி உறவாக இருக்கும். இவற்றின் உறவு 2008இல் கூகிள் அதன் அன்ரொயிட் மென்பொருளை அப்பிளின் iPhone இற்கெதிராக வெளியிட்டபோது சற்று விரிசலடைந்திருந்தது.

இதிலிருந்து இவ்விரு நிறுவனங்களினதும் உறவு தொடர்ந்தும் விரிவடைந்து வருகின்றது.

5 வருடங்களின் முன்னர் iPhone இன் அறிமுகத்திலிருந்து அப்பிளின் கையடக்கத் தொலைபேசி Operating system இல் கூகிளின் வரைபடச் சேவையானது ஓர் அம்சமாக இருந்துவந்தது.

அப்பிள் கருவிகளின் பயனாளர்களால் வரைபடச் சேவைகள் வேண்டுகை விடுக்கப்பட்டு வருவது கூகிளிற்கு மக்களின் நகர்வுகள் மற்றும் தெரிவுகளைப் பெற்றுத்தந்ததெனலாம். இதனால் கூகிளிற்கு உள்ளுர் வர்த்தகங்களுக்காக இன்னும் கூடுதலான விளம்பரங்களை விற்பனைசெய்யக்கூடியதாயிருந்தது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply