இனிப்புக் கொழுக்கட்டை

Loading...

இனிப்புக் கொழுக்கட்டை
தேவையானவை:
அரிசி மாவு – ஒரு கப், தேங்காய்த் துருவல் – 1 கப், வெல்லம் – சுவைக்கு ஏற்ப, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:
கடாயில் தண்ணீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அதில் அரிசி மாவைத் தூவி, கெட்டியாகக் கிளறி எடுக்க வேண்டும். இதுதான் மேல் மாவு. தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய் சேர்த்து, பூரணத்தைத் தயார் செய்ய வேண்டும். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, மேல் மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும்.

பலன்கள்:
உடனடி எனர்ஜி தரக்கூடிய ஹெல்த்தி ரெசிப்பி. இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து நிறைந்தது. ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு, குண்டாக இருப்பவர்கள் அதிகம் சாப்பிடக் கூடாது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply