இந்தியாவின் முதல் ஆன்ட்ராய்டு மைக்ரோவேவ் ஓவன்

Loading...

இந்தியாவின் முதல் ஆன்ட்ராய்டு மைக்ரோவேவ் ஓவன்இந்தியாவில் மெய்டு என்ற பெயரில் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்கும் புதிய மைக்ரோவேவ் ஓவன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன், டேப்லட் என்பதெல்லாம் போய், இப்போது மைக்ரோவேவ் ஓவனும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது சாதாரண மைக்ரோவேவ் போல இல்லாமல் சில பிரத்தியேக வசதிகளை கொண்டது. இதில் ஆட்டோ-குக் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டாலும், அதே சமயம் இதை இயக்க எளிதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த மெய்டு ஆன்ட்ராய்டு மைக்ரோவேவ் ஓவன், சிறப்பான வாய்ஸ் அசிஸ்டன்ஸ் வசதியையும் கொண்டது.

இதனால் ருசிகரமான சமையல் முடிந்துவிட்டது என்பதையும் இதன் வாய்ஸ் வசதி மூலம் தெரிவிக்கிறது. இது மட்டுமல்லாமல் இதில் இன்னும் வசதிகள் உள்ளது.

விதவிதமான உணவு பதார்த்த தகவல்களை எளிதாக டவுன்லோட் செய்து வைத்து கொள்ளவும் முடியும். நேற்று திருவனந்தபுரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆன்ட்ராய்டு மெய்டு மைக்ரோவேவ் ஓவன் ரூ. 7,000 விலையினையும் விட குறைவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply