இணையதளங்களான பேஸ்புக், டுவிட்டரால் தங்கள் நம்பிக்கை குறைந்து வருகிறது..கவலை அதிகரிக்கிறது

Loading...

இணையதளங்களான பேஸ்புக், டுவிட்டரால் தங்கள் நம்பிக்கை குறைந்து வருகிறது.இங்கிலாந்தின் சல்போர்டு பல்கலைக்கழகத்தின், சல்போர்டு பிசினஸ் ஸ்கூல் சார்பில் சமூக இணைய தளங்களின் பாதிப்பு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அறிக்கை: கருத்து சொன்னவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணைய தளங்களை பயன்படுத்துவதால் தங்கள் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். பலர், அதனால் தங்கள் நிலை மோசமாகி விட்டதாக கருத்து தெரிவித்தனர்.

தொடர்பில் இருக்கும் நண்பர்களின் சாதனைகள், திறமைகளை அறிந்து ஒப்பிட்டு பார்ப்பதால், தங்கள் நம்பிக்கை குறைந்து விட்டதாகவும், கவலை அதிகரிப்பதாகவும் 3ல் இரண்டு பங்கினர் கூறினர். பேஸ்புக், டுவிட்டரால் ஓய்வு எடுக்க நேரமில்லை என்றும், தூக்கம் குறைந்து விட்டதாகவும் பலர் தெரிவித்தனர். சமூக இணைய தளங்களில் அதிக நேரம் செலவிடுவதால் பணியிடத்தில் பிரச்னையும், உறவினர்களின் கோபத்தையும் சந்திப்பதாக 3ல் ஒரு பங்கினர் தெரிவித்தனர்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN